Advertisment

டாட்டூவை மாற்றிய வனிதா: உறவுகள் வலுப்பட வேண்டுமாம்

வனிதா விஜயகுமார் கடந்த ஆண்டு பீட்டர் பால் என்பவரை 3-வதாக திருமணம் செய்துகொண்டார். ஆனால் இவர்கள் இவகள் திருணத்திற்கு முன்பே பல்வேறு பிரச்சினைகள் வெடித்தது.

author-image
WebDesk
New Update
புதிய சீரியல்: வனிதாவுடன் நடிக்கும் சீனியர் நடிகை யார் தெரியுமா?

Vanitha Vijayakumar Tamil News : தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதா விஜயகுமார். 1995-ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான சந்திலேகா படத்தின் மூலம அறிமுகமான இவர் அதன்பிறகு ஒரு சில படங்களில் நடித்துள்ளார். தற்போது டிவி ரியாலிட்டி ஷோக்களில் நடுவராக இருந்துவரும் வனிதா சர்ச்சைகளுக்கு பெயர்போனவர் என்பது அனைவரும் அறிந்ததே. மேலும் கடந்த ஆண்டு தனியார் தொலைக்காட்சி நடத்திய பிக்பாஸ்ரியாலிட்டி ஷோவில் கலந்துகொண்ட இவர் அதன்பிறகு தமிழகத்தில் பரவலாக அறியப்பட்டார்.

Advertisment

தொடர்ந்து தந்தையுடன் சண்டை மற்றும் திருமணத்தில் சர்ச்சை என அனைத்திலும் ஒருவித பிரச்சனைகைளை சந்தித்து வந்த இவர் கடந்த ஆண்டு பீட்டர் பால் என்பவரை 3-வதாக திருமணம் செய்துகொண்டார். ஆனால் இவர்கள் இவகள் திருணத்திற்கு முன்பே பல்வேறு பிரச்சினைகள் வெடித்தது. ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாத வனிதா திருமணத்திற்கு முன்பே பீட்டர் பாலுடன் இணைந்து ஊர் சுற்றுவது, சமூகவலைதளங்களில், புகைப்படத்தை போடுவது, பேட்டி கொடுப்பது என்று மிகவும் என மகிழ்ச்சியாக நாட்களை கழித்து வந்தார்.

மேலும் திருமணத்திற்கு முன்பே பீட்டர் பால் பெயரை வனிதாவும், வனிதாவின் பெயரை பீட்டர் பாலும் கைகளில் டாட்டு செய்திருந்தனர். மகிழ்ச்சியாக இருந்த இவர்களின் வாழ்கையில் திடீரென புயல் வீசியது. இதன் தொடர்ச்சியாக பீட்டர் பாலை பிரிந்துவிட்டதா நடிகை வனிதா பரபரப்பான வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த வீடியோ தமிழகத்தில் பெரும் வைரலான நிலையில், தற்போது வனிதா தனது கையில் இருந்து பீட்டர் பாலின் டாட்டூவை மாற்றி புதிய டாட்டூ குத்தியுள்ளார். இதில் அவர் குத்தியுள்ள புதிய டாட்டூ ஒரு சைனீஸ் சிம்பல் எனவும், அந்த டாட்டூவுக்கு அர்த்தம் டபுள் ஹபினஸ் எனவும் வனிதா தெரிவித்துள்ளார்.

இது குறித்து வீடியோ வெளியிட்டுள்ள வனிதா, போகி பண்டிகையில் தனது பழைய கேட்ட விஷயங்கள் கழிந்து புதிய சந்தோசங்கள் தொடரட்டும் என்று கூறி தனது புதிய டாட்டூ குத்திய வீடியோவை  யூடுயூப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் வனிதாவின் மகள் இனிமேல் டாட்டூ குத்துவியா கேட்க அதற்கு பதிலளித்துள்ள வனிதா, டாட்டூ குத்துவேன் ஆனால், மாற்றாத அளவிற்கு தெளிவாக குத்துவேன்.  இனி வேற எந்த நாதாரி பெயரும் குத்த மாட்டேன். என்னுடைய வாழ்க்கையில் உள்ள உறவுகள் மேலும் உறுதியடைய வேண்டும் என்று இந்த டாட்டூவை குத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment