Advertisment

அவரை உடனே விரட்டுங்க வனிதாக்கா…. ரசிகர்கள் அவசர கோரிக்கை

Vanitha’s fans wants her makeup artist to be changed Tamil News: பிக் பாஸ் பிரபலம் வனிதா விஜயகுமாரின் மேக்கப் விஷயத்தில் அப்செட்டான அவரது ரசிகர்கள் அவரிடம் புதிய கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர்.

author-image
WebDesk
Jun 23, 2021 11:35 IST
vanitha vijayakumar Tamil News: Vanitha’s fans wants her makeup artist to be changed

vanitha vijayakumar Tamil News: விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய பிக் பாஸ் சீசன் 3 மூலம் சினி உலகிற்கு ரீ-என்ட்ரி கொடுத்த வனிதா விஜயகுமார் தற்போது சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் பிசியாக வலம் வருகிறார். 4, 5 படங்களை கைவசம் வைத்துள்ள அவர் வெளித்தோற்றத்தில் மிகவும் அக்கறையாக உள்ளார். இதை அவரது அண்மைக்கால புகைப்படங்கள் காட்டுகின்றன. மேலும் இந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ் மழை பொழியும் அவரது ரசிகர்கள், அவரின் முகத்தில் ஒரு தனி அழகு மற்றும் தெளிவு தெரிவதாக கூறுகிறார்கள்.

Advertisment
publive-image

வனிதா இன்ஸ்டா பக்கத்தில் பதிவிடும் புகைப்படங்களை அவரது ரசிகர்கள் அதிகமாக பகிர்வதோடு வித விதமான கமெண்டுகளையும் தட்டிச் செல்கின்றனர். அந்த வகையில் வனிதா 40 வயதானாலும் அவர் இன்னும் இளமையாகவும், அழகாகவும் இருப்பதாக ரசிகர்கள் கூறுகின்றனர். சில சமயங்களில் அவரது புகைப்படத்திற்கு ஏற்றுக்கொள்ளும் அளவிலான விமர்ச்சனைகளையும் முன் வைக்கின்றனர். அவை பெருபாலும் அவரது மேக்கப் குறித்தே இருக்கின்றன.

publive-image

குறிப்பிட்ட கூற வேண்டும் என்றால் சமீபத்தில் வனிதா ஒரு சின்னத்திரை நிகழ்ச்சிக்காக கண்ணில் ஊதா கலர் மை போட்ட புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார். அதைப் பார்த்த அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்ததோடு கமெண்டுகளை தட்டிச் சென்றுள்ளனர். அதில் அவரது ரசிகர்கள் 'அக்கா, நீங்கள் இயற்கையாகவே அழகு. மேக்கப் இல்லாமல் செம அழகாக இருக்கிறீர்கள். ஆனால் உங்களுக்கு மேக்கப் போட்டு அழகை கெடுக்கிறார்கள். தயவு செய்து உங்களுக்கு மேக்கப் போடும் நபரை விரட்டிவிடுங்கள்' என்றுள்ளனர்.

publive-image

மேலும் 'ஒரு நடிகைக்கு மேக்கப் ரொம்ப முக்கியம். இருக்கும் அழகை மேக்கப் போட்டு கெடுக்க வேண்டாம். நல்ல மேக்கப் கலைஞராக வேலைக்கு வைக்கவும். இல்லை உங்களுக்கு நீங்களே மேக்கப் போட்டுக் கொண்டிருக்கிறீர்கள் என்றால் தயவு செய்து வித்தியாசமான நிற லிப்ஸ்டிக், மை, பொட்டை பயன்படுத்த வேண்டாம்' என்றும் தெரிவித்துள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

#Bigg Boss Tamil #Actress Vanitha #Bigg Boss #Vanitha #Tamil Bigboss #Vanitha Vijayakumar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment