’பிக் பாஸ்’ பிரபலமும் ’குக்கு வித் கோமாளி’ நிகழ்ச்சியில், டைட்டில் பட்டத்தை வென்றவருமான வனிதா விஜய்குமார் தான் தற்போது கோலிவுட்டின் ஹாட் டாபிக். அவர் சமீபத்தில் பீட்டர் பால் என்பவரை மணந்தார். ஆனால் தனக்கு சட்டப்பூர்வ விவாகரத்து வழங்கவில்லை என்று பீட்டரின் முதல் மனைவி புகார் அளித்ததும், இந்த திருமணம் சர்ச்சையானது.
பீட்டரின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் அவர் மீது, அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். ஆனால் அதற்கெல்லாம் பதிலடி தரும் விதமாக வீடியோ ஒன்றை வெளியிட்டார் வனிதா. இந்நிலையில் வனிதாவின் திருமணம் குறித்து லட்சுமி ராமகிருஷ்ணன், குட்டி பத்மினி உள்ளிட்ட பிரபலங்களும் கருத்துத் தெரிவித்தனர். இதில் பிரபல தயாரிப்பாளர் ரவிந்திரனும் ஒருவர்.
Advertisment
Advertisements
இதையடுத்து வனிதா அவரை வாட்சப்பில் தொடர்பு கொண்டு, தன்னை மன்னிப்பு கேட்க வேண்டும் என மிரட்டி ஆடியோவை வெளியிட்டுள்ளதாகவும் ரவிந்திரன் தெரிவித்துள்ளார். அதோடு அந்த வாட்சப் ஆடியோவையும் அவர் வெளியிட்டுள்ளார்.
இதை தொடர்ந்து பேசிய ரவீந்திரன், ''வனிதாவின் திருமணத்தில் நான் பேசிய காரணம், அவர் முறையாக டைவர்ஸ் பெறாமல் திருமணம் செய்ததும், பீட்டர் பாலின் முதல் மனைவி ஹெலனும், அவர்கள் குழந்தைகளும் கொடுத்த பேட்டியை பார்த்த பிறகும் தான். அவரின் ரசிகனான எனக்கு, அவர் செய்யும் தவறுகளின் மீது ஆதங்கள் உள்ளது. அதைத் தான் வெளிப்படுத்தினேன். அதனால் இந்த விவகாரத்தில் என்னால் மன்னிப்பு கேட்க முடியாது'' என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”