மீண்டும் காதலிக்கிறேன்… வனிதாவின் லவ் போஸ்ட்! 5 ஆவது முறையா காதலா?

பிரபல டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் என்பவருடன் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வந்தார்.

Vanitha Vijayakumar controversy news hairstyle viral photo instagram tamil news
Vanitha Vijayakumar haircolor viral photo instagram

vanitha vijayakumar vanitha instagram : பீட்டர் பால் – வனிதா விஜயகுமார் திருமண உறவு சில மாதங்கள் மட்டுமே நீடித்த நிலையில் மீண்டும் காதலில் விழுந்து இருக்கிறார் வனிதா விஜயகுமார்.

வனிதா கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பீட்டர்பால் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திடீரென இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் பீட்டர்பாலை பிரிந்தது ஏன் என்பது குறித்து வனிதா தனது தரப்பிலிருந்து நீண்ட விளக்கத்தை அளித்து இருந்தார். இதற்கிடையில் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் மீண்டும் பீட்டர் பாலுடன் வாழ வனிதா ஆசைப்பட்டதாகவும் ஆனால் பீட்டர்பால் தான் அவரை நிராகரித்து விட்டதாகவும் செய்திகள் வந்தன.

இவருக்கு ஏற்கனவே 2 முறை திருமணமாகியுள்ளது. ஆனால், வனிதா அந்த 2 கணவர்களிடமும் விவாகரத்து பெற்றுவிட்டார். இதனிடையே கடந்த ஜூன் மாதம் பீட்டர் பால் என்பவரை நடிகை வனிதா மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்நிலையில், வனிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “நான் மீண்டும் காதலிக்கிறேன்” என பதிவிட்டுள்ளார். ஆனால் யாரை காதலிக்கிறார், எதற்காக அப்படி பதிவு செய்துள்ளார் என தகவல் தெரியவில்லை. நடிகை வனிதாவின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் பலரும் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

வனிதா விஜயகுமார் முதன்முதலில் நடிகர் ஆகாஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் ஒரு மகன், மகள் உள்ளனர். இந்நிலையில் அவரை விவாகரத்து செய்து விட்டு ஆனந்த் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு ஒரு மகளைப் பெற்றெடுத்தார்.

பின்னர் அவருடன் விவாகரத்து பெற்று பிரபல டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் என்பவருடன் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வந்தார். பின்னர் அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சமீபத்தில் பீட்டர் பால் என்பவரை 3-வது முறையாக திருமணம் செய்து கொண்டார்.

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Vanitha vijayakumar vanitha instagram vanitha peter paul vanitha vijayakumar husband

Next Story
தி க்ரே மென் : அவெஞ்சர்ஸ் இயக்குநர்கள் படத்தில் நடிப்பு அசுரன்!Actor Dhanush joins with Avengers directors for the gray man netflix film
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com