Advertisment

மீண்டும் தாலி சர்ச்சையில் வனிதா… ஏன் மேடம் உங்களுக்கே போர் அடிக்கலையா?

இது எத்தனையாவது திருமணம், கல்யாணம் தான் உங்கள் பொழுதுபோக்கா, எத்தனை முறை கல்யாணம் பண்ணுவீங்க, ஏன் மேடம் உங்களுக்கே போர் அடிக்கலையா என்று நெட்டிசன்கள் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

author-image
WebDesk
New Update
vanitha Vijayakumar, Vanitha wearing thali, Vanitha wearing thali in selfie, pickup drop, pickup drop movie, வனித விஜயகுமார், வனிதா, தாலி அணிந்த வனிதா, பிக்கப் டிராப், பவர் ஸ்டார் சீனிவாசன், வனிதா சர்ச்சை, power star srinivasan, vanitha vijayakumar controversy, thali, vanitha photo

சர்ச்சையின் மறுபெயர் வனிதா என்கிற அளவுக்கு சமூக ஊடகங்களில் அடிக்கடி ஏதாவது ஒரு விஷயமாக அவர் சம்பந்தமாக சர்ச்சை ஏற்படும். தற்போது வனிதா தாலி அணிந்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் பலரும் எத்தனை முறை கல்யாணம் பண்ணுவிங்க மேடம் உங்களுக்கு போர் அடிக்கலையா என்று சமூக ஊடகங்களில் கேட்டு வருகின்றனர்.

Advertisment

நடிகர் விஜயகுமார் - மஞ்சுளா தம்பதியரின் மகளான வனிதா முதன் முதலில் நடிகர் விஜய் உடன் சந்திரலேகா படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். அதற்கு பிறகு, பட வாய்ப்புகள் கிடைக்காததால் திருமணம் செய்துக்கொண்டார். ஆனால், திருமண வாழ்க்கை மணமுறிவிலேயே முடிந்தது. கருத்து வேறுபாடு காரணமாக அவருடைய 2 திருமணங்களும் விவாகரத்தில் முடிந்தது. வனிதாவுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்த சூழலில்தான், பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று தனது வெளிப்படையான தைரியமான இயல்பின் முலம் கவனத்தைப் பெற்றார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அவருக்கு மீண்டும் டிவி நிகழ்ச்சிகளிலும் சினிமாக்களிலும் வாய்ப்புகளைப் பெறத் தொடங்கினார்.

இதனைத்தொடர்ந்து, சினிமாவி தொழில்நுட்ப பணி செய்யும் பீட்டர் பாலை திருமணம் செய்துகொண்டார். அவர் ஏற்கெனவே திருமணமானவர் என்பதால் இந்த திருமணமும் சர்ச்சையானது. ஆனால், இந்த திருமணமும் விரைவிலேயே முடிவுக்கு வந்தது.

இதனைத் தொடர்ந்து, வனிதா விஜயகுமார் விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் டைட்டிலை வென்றார். தொடர்ந்து பிபி ஜோடிகள் நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அங்கே தனது வளர்ச்சியைத் தடுக்க முயற்சி செய்கிறார்கள் என்று கூறி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். வனிதா விஜயகுமார் தொடர்பான சர்ச்சைகள் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையை வைத்தே எழுகின்றன.

இந்த சூழலில்தான், நகைச்சுவை நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் உடன் மாலை மாற்றிக்கொள்கிற புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். வனிதா 4வது திருமணம் செய்துகொண்டார் என்று நெட்டிசன்கள் பலரும் கம்மெண்ட் செய்து ட்ரோல் செய்தனர். ஆனால், அந்த புகைப்படம் வனிதாவும் பவர் ஸ்டார் சீனிவாசனும் பிக்கப் டிராப் படத்தில் சேர்ந்து நடிப்பதால் அந்த படத்துக்காக எடுக்கப்பட்ட புகைப்படம் என்று அறிவித்தனர்.

வனிதாவின் 4வது திருமணம் பற்றி சமூக ஊடகங்களில் நெட்டிசன்கள் ட்ரோல் செய்தபோது, நான் 4 கல்யாணம் இல்லை 40 கல்யாணம்கூட பண்ணிக்குவேன் உங்களுக்கு என்ன பிரச்னை என்று கேட்டு பதிலடி கொடுத்தார்.

இந்த நிலையில்தான், வனிதா கழுத்தில் புது மஞ்சள் தாளி கயிருடன் இருக்கிற ஒரு செல்ஃபி புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஆனால், இந்த புகைப்படத்தை வைத்து யாரும் மீண்டும் ஒரு சர்ச்சையை கிளப்பிவிடக்கூடாது என்பதற்காக, பிக்கப் டிராப் ஷூட்டிங் செல்ஃபி என்று குறிப்பிட்டுள்ளார்.

வனிதா விஜயகுமார் கழுத்தில் தாளியுடன் இருக்கிற புகைப்படத்தைப் பார்த்த நெட்டிசன்கள் மறுபடியுமா தாளி என்று கேட்டு ட்ரோல் செய்கின்றனர். அவருடைய ரசிகர்கள், இந்த ஹேட்டர்களை நீங்கள் ரொம்ப அருமையாக உங்கள் வழியில் டீல் செய்கிறீர்கள். எப்போதும் நீங்கள் உத்வேகமாக இருக்கிறீர்கள் என்று தெரிவித்துள்ளனர். சில ரசிகர்கள் அக்கா நீங்கள் இன்னும் இளைமையாகிட்டு இருக்கீங்க என்று குறிப்பிட்டுள்ளனர்.

நெட்டிசன்கள் சிலர் இது எத்தனையாவது திருமணம், கல்யாணம் தான் உங்கள் பொழுதுபோக்கா, எத்தனை முறை கல்யாணம் பண்ணுவீங்க, ஏன் மேடம் உங்களுக்கே போர் அடிக்கலையா என்று கேட்டு அவரை கடுமையாக விமர்சித்தும் வருகின்றனர். வனிதா தாலி அணிந்து புகைப்படம் வெளியிட்டதை வைத்து சமூக ஊடகங்களில் நெட்டிசன்கள் அதை சர்ச்சையாக்கி வருகின்றனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Vanitha Vijayakumar Vanitha Actress Vanitha
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment