வனிதா பெயரில் போலி யூடியூப்: சும்மா விடுவாரா?

Vanitha Vijayakumar : போலி யூடியூப் சேனல் மட்டும் இல்லை உங்கள் பெயரில் போலி டுவீட்டர் கணக்கும் இருக்கிறது

By: Updated: August 31, 2020, 03:05:33 PM

கொரோனா ஊரடங்கு காலத்தில் கொரோனா பாதிப்புக்கு நிகராக ஊடகங்களில் செய்தியாக அடிபட்டவர் நடிகை வனிதா விஜயகுமார். இந்நிலையில், தன் பெயரில், போலியாக உலவிவரும் யூடியூப் சேனல் தொடர்பாக பிரதமர் மற்றும் முதல்வரிடம் அவர் புகார் அளித்துள்ளார்.

கொரோனா ஊரடங்கு காலத்தில், வனிதா விஜயகுமார் யூடியூப் சேனல் ஒன்றை துவங்கி நடத்தி வருகிறார். வித, விதமாக சமைத்து அந்த வீடியோக்களை தன் யூடியூப் சேனலில் தொடர்ந்து வெளியிட்டு கொண்டிருக்கிறார் வனிதா. தான் லாக்டவுனில் திருமணம் செய்து கொண்டது பெரிய பிரச்சனையான போது கணவர் பீட்டர் பாலை பேட்டி எடுத்து அந்த வீடியோவை தன் யூடியூப் சேனலில் வெளியிட்டார்.

இந்நிலையில் வனிதாவின் யூடியூப் சேனல் போன்றே யாரோ போலியாக ஒரு சேனலை துவங்கி நடத்தி வருகிறார். அதுவும் வனிதாவின் பெயரை பயன்படுத்தி, அவரின் வீடியோக்களையே வெளியிடுகிறார். இந்த போலி சேனலை பார்த்த ரசிகர் ஒருவர் வனிதாவிடம் இது குறித்து டுவிட்டரில் தெரிவித்தார்.

இதற்கு வனிதா பதில் அளித்திருப்பதாவது,

நன்றி. போலி சேனல்களை யூடியூப் இந்தியா நிர்வாகம் கவனிக்க வேண்டும். யார் வேண்டுமானாலும் சேனல் துவங்கலாம் என்று இருக்கிறது. பின்னணி குறித்து விசாரிப்பதே இல்லை. ஆதார் மற்றும் கே.ஒய்.சி. ஆகியவற்றை கேட்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அந்த டுவீட்டில் பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் ஆகியோரின் பெயர்களை டேக் செய்துள்ளார் வனிதா.

போலி யூடியூப் சேனல் மட்டும் இல்லை உங்கள் பெயரில் போலி டுவீட்டர் கணக்கும் இருக்கிறது அக்கா. அது என்னவென்று கொஞ்சம் பாருங்கள். நீங்கள் போடும் டுவீட்டுகளுக்கு அந்த போலி ஆசாமி பதில் அளித்துக் கொண்டிருக்கிறார் என்று ரசிகர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Vanitha vijayakumar youtube channel fake account fans complaint twitter chief minister prime minister

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

விடைபெற்ற எஸ்.பி.பி.
X