ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் திருமதி ஹிட்லர் சீரியலில் கெஸ்ட் ரோலில் நடித்து வரும் வனிதா, அந்த சீரியலில் நடித்து வரும் முன்னாள் நடிகை அம்பிகாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
View this post on Instagram
பிக் பாஸ் தமிழ் 3 என்ற நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்குபெற்ற வனிதா, பின்பு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘குக் வித் கோமாளி’ சமையல் நிகழ்ச்சியில் டைட்டில் பட்டம் வென்றார்.
முன்னதாக, சன் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை ஒளிபரப்பாகி வரும் சந்திரலேகா தொடரில் சிறப்புத் தோற்றத்தில் நடித்தார். இந்நிலையில், தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் திருமதி ஹிட்லர் சீரியலில் கெஸ்ட் ரோலில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
View this post on Instagram
இதற்கிடையே, வனிதா மீண்டும் திரைப்படங்களில் கதாநாயகியாக நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியது. இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவரும், கீர்த்தி சுரேஷ், பாபி சிம்ஹா நடித்த பாம்பு சட்டை படத்தை இயக்கியவருமாக ஆடம் தாசன் தாக் இந்த படத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. இத்திரைப்படம், முழுக்க முழுக்க கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையம்சம் கொண்ட இந்த படத்துக்கு அனல் காற்று என்றும் பெயர் வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
View this post on Instagram
1995 ஆம் ஆண்டு சந்திரலேகா[2] என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil