கார் விபத்தில் இறந்த தோழிக்காக வருத்தப்படும் யாஷிகா ஆனந்த்க்கு, குற்றவுணர்ச்சியை நிறுத்து என நடிகை வனிதா அட்வைஸ் செய்துள்ளார்.
கடந்த ஜூலை மாதம் 25 ஆம் தேதி அன்று, நடிகை யாஷிகா ஆனந்த், தனது தோழிகளுடன் கிழக்கு கடற்கரை சாலையில், காரில் சென்று கொண்டிருந்தபோது, விபத்துக்குள்ளானார். காரை அப்போது ஒட்டிச் சென்ற யாஷிகா, நிலைதடுமாறி சாலை தடுப்புக் கம்பிகளில் மோத, இந்த விபத்து நிகழ்ந்தது. விபத்தில் யாஷிகாவின் தோழி பவானி உயிரிழந்தார். யாஷிகா சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சிகிச்சைக்கு பிறகு யாஷிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது நிலை குறித்து ரசிகர்களுக்கு அப்டேட் செய்திருந்தார். மேலும், அவர் குடித்து வாகனம் ஓட்டியதால் தான் அவரது தோழி இறந்தார் என அவதூறு பரப்புவர்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார்.
மேலும் மற்றொரு பதிவில் யாஷிகா, தனது தோழியின் மரணத்திற்கு வருத்தம் தெரிவித்ததோடு, வாழ்நாள் முழுவதும் அந்த குற்றவுணர்ச்சி எனக்கு இருக்கும். அவரது உயிர் தோழியை பிரிந்து வாடும் தோழியின் குடும்பத்திற்கு இழப்பைக் கடந்து வர சக்தியை வழங்க இறைவனிடம் வேண்டிக் கொள்வதாகவும் பதிவிட்டிருந்தார்.
இந்த நிலையில் யாஷிகாவின் பதிவுக்கு கமெண்டில் அட்வைஸ் செய்த நடிகை வனிதா, டார்லிங் இது யாருக்கு வேண்டுமானலும் நடக்கும். அதனால் தான் அது விபத்து, பிறப்பும் இறப்பும் முன்பே முடிவு செய்யப்பட்டது. யாராலும் மாற்ற முடியாது. நீயும் பாதிக்கப்பட்டவள் தான். உன்னுடைய கட்டுப்பாட்டில் இல்லாத ஒன்றிற்காக உன்னையே நீ குற்றம் சொல்லிக்கொள்வதை முதலில் நிறுத்து, யார் என்ன நினைப்பார்கள் என்பதைப் பற்றி கவலைப்படாதே, நீ தெளிவாக இரு, ஓய்வெடு, உடல் நலனைப் பார்த்துக் கொள், இந்த கோரமான விபத்தில் நீ உயிர் பிழைத்ததிற்கு காரணம் இருக்கும், கடவுள் உன்னை ஆசீர்வதிப்பார், என்று பதிவிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil