Advertisment

பவன் கல்யாண்-ஐ திருமணம் செய்துவிட்டீர்களானு கேட்கும் ஆந்திரா ரசிகர்கள்? ஜாலியாகப் பேசிய வனிதா

நடிகை வனிதா விஜயகுமார் நடித்துள்ள ‘வைஜெயந்தி ஐ.பி.எஸ்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசும்போது, தான் ஆந்திரா போனால், நீங்கள் பவர் ஸ்டார் பவன் கல்யாண்-ஐ திருமணம் செய்துவிட்டீர்களா?” என்று ஆந்திரா ரசிகர்கள் கேட்பதாக வனிதா ஜாலியாகப் பேசியுள்ளார்.

author-image
WebDesk
New Update
vanitha vyj ips

நடிகை வனிதா விஜயகுமார், அந்த வரிசையில் ‘வைஜெயந்தி ஐ.பி.எஸ்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

நடிகை வனிதா விஜயகுமார் நடித்துள்ள ‘வைஜெயந்தி ஐ.பி.எஸ்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசும்போது, தான் ஆந்திரா போனால், நீங்கள் பவர் ஸ்டார் பவன் கல்யாண்-ஐ திருமணம் செய்துவிட்டீர்களா?” என்று ஆந்திரா ரசிகர்கள் கேட்பதாக வனிதா ஜாலியாகப் பேசியுள்ளார்.

Advertisment

சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்த நடிகை வனிதா விஜயகுமார், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு, சீரியல், சினிமா என்று நடிக்கிறார். நடிகை வனிதா விஜயகுமார், அந்த வரிசையில் ‘வைஜெயந்தி ஐ.பி.எஸ்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில், இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் நடித்துள்ளார். 

நடிகை வனிதா விஜயகுமார் நடிக்கும் ‘வைஜெயந்தி ஐ.பி.எஸ்’ படத்தை புதுமுக இயக்குனர் மனோஜ் கார்த்திக் காமராஜு இயக்கியுள்ளார். ஜென் சினிமாஸ், கே.பி. தினகரன் தயாரித்துள்ளார். இப்படத்தை 2எஸ் என்டேர்டைன்மெண்ட், எஸ். வினோத் குமார் வெளியிடவுள்ளார். 

இந்த தயாரிப்பு நிறுவனம் ஏற்கனவே பவர் ஸ்டார்  சீனிவாசன் மற்றும் வனிதா நடித்து வரும் பிக்கப் படத்தை தயாரிக்கும் நிறுவனம் ஆகும். அண்மையில், 'வைஜெயந்தி ஐ.பி.எஸ்’ திரைப்படத்தின் இசைவெளியீட்டு வெளியீட்டு விழாவில் அண்மையில் நடைபெற்றது. 

‘வைஜெயந்தி ஐ.பி.எஸ்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய பவர் ஸ்டார் சீனிவாசன்,  “என் தோழி வனிதா விஜயகுமாரை சந்தித்து நீண்ட நாட்களாகிவிட்டது” என்று கூறினார். இதைக் கேட்ட அங்கிருந்த பத்திரிகையாளர்கள்,  “வனிதா உங்கள் தோழியா? உங்களுக்கு கல்யாணமே பண்ணி வச்சுட்டாங்க என்றனர். 

இதையடுத்து பேசிய வனிதா விஜயகுமார், “ஆந்திராவுக்கு போனா, நீங்க பவர் ஸ்டார் பவன் கல்யாண் திருமணம் செய்து விட்டீர்களா என கேட்கிறார்கள். அதற்கு நான், நான் தமிழ்நாட்டு பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசனை தான் திருமணம் செய்து இருக்கேன் என்று கூறி வருகிறேன்” ஜாலியாகப் பேசினார்.

வனிதா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள  ‘வைஜெயந்தி ஐ.பி.எஸ்’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில், படக்குழு ஒரு போட்டோவை வெளியிட்டுள்ளது. அதில், வனிதா சங்கர் கணேஷ் அவர்களை விசாரணை செய்யும் காட்சியில் ரோஸ் மில்க் சாப்பிடலாமா?.. என்று கேட்கும் வண்ணம் காட்சியை அமைத்திருக்கிறார்கள். இந்த படத்தில் இமான் அண்ணாச்சி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளதாகக் கூறப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Vanitha Vijayakumar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment