நடிகை வனிதா விஜயகுமார் பிரபல நடிகர் பவர் ஸ்டாருக்கு உம்மா கொடுக்கச் சென்ற செம்ம போல்ட் போட்டா சமூக ஊடகங்களில் நெட்டிசன்கள் மத்தியில் கலவையான கம்மெண்ட்களைப் பெற்று வைரலாகி வருகிறது.
நடிகர் விஜயகுமார் – நடிகை மஞ்சுளா தம்பதியின் மகளாக தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமான நடிகை வனிதா விஜயகுமார். இன்றைக்கு வனிதா என்றால் வைரல், வைரல் என்றால் வனிதா என்கிற அளவுக்கு அவரைப் பற்றிய செய்திகள், வீடியோக்கள், புகைப்படங்கள் எதுவானாலும் வைரலாகத் தவறியதே இல்லை.
திருமண வாழ்க்கையில் பிரிவுகளைச் சந்தித்த வனிதா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் தனது அதிரடியான இயல்பால் பேசப்பட்டார். அதன் பிறகு நிறைய டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இப்போது தனியாக நிறைய தொழில்களை ஆரம்பித்து வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.
தற்போது வனிதா பிரபல காமெடி நடிகர் பவர்ஸ்டார் ஸ்ரீநிவாஸனின் கன்னத்தை பிடித்து முத்தம் கொடுக்கச் செல்வது போன்ற ஒரு போல்ட்டான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள், நெட்டிசன்கள் கலவையான கருத்துகளையும் விமர்சனங்களையும் பதிவிட்டு பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“