/tamil-ie/media/media_files/uploads/2021/02/VV1.png)
Vanitha Vijayakumar Tattoo Controversy Tamil News Peter Paul
Vanitha latest movie: பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான வனிதா தற்போது சமுத்திரகனிக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர் வனிதா விஜயகுமார். குக்வித் கோமாளி நிகழ்ச்சியின் முதல் சீசனில் பங்கேற்ற வனிதா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.தற்போது டிவி நிகழ்ச்சிகள், யூடியூப் சேனல் போன்றவற்றில் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார். இதற்கிடையில் சில படங்களிலும் முக்கிய வேடங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.ஆதம் தாசன் இயக்கத்தில் ஹீரோயினை மையப்படுத்திய அனல் காற்று என்ற படத்தில் அவர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் அவருடன் கருணாகரன் முக்கிய கேரக்டரில் நடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.
தற்போது நீண்ட இடைவேளைக்கு பிறகு பிரசாந்த் நடித்து வரும் 'அந்தகன்' படத்தில் முக்கிய கேரக்டரில் வனிதா நடிப்பதாக ஏற்கனவே கூறப்பட்டது. தற்போது அந்த தகவலை வனிதா சமூகவலைதளத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், 'அந்தகன்' பட செட்டில் நானும் இணைந்துள்ளேன். சமுத்திரக்கனிக்கு ஜோடியாக நடிக்கிறேன்" என ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார். இந்த படத்தில் சமுத்திரக்கனி போலீசாக நடிக்கிறார். அவரது மனைவி வேடத்தில் தான் வனிதா நடிக்க போகிறாராம்.பாலிவுட்டில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான படம் 'அந்தாதூன்'. இப்படத்தை தமிழில் ரீமேக் செய்கின்றனர். அந்தகன்' படத்தில் சமுத்திரக்கனி, வனிதா விஜயக்குமார் நடிக்கும் காட்சிகள் கடந்த 10 நாட்களாக எடுக்கப்பட்டு வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.