/tamil-ie/media/media_files/uploads/2021/07/vanitha-power-star-srinivasan-marriage.jpg)
நடிகை வனிதா விஜயகுமார் பிரபல நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் உடன் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்ட புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தைப் பார்த்த நெட்டிசன்கள், ரசிகர்கள் சிலர் வனிதாவுக்கு பவர் ஸ்டாருக்கும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். சிலர் இந்த கல்யாணம் உண்மைதானா என்று நம்ப முடியாமல் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
சர்ச்சையின் மறுபெயர் வனிதா விஜயகுமார் என்ற அளவுக்கு நடிகை வனிதா தனது வெளிப்படையான இயல்பின் காரணமாக ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
நடிகர்கள் விஜயகுமார் - மஞ்சுளா தம்பதியரின் மகளான வனிதா சந்திரலேகா படத்தின் மூலம் நடிகர் விஜய்க்கு ஜோடியாக சினிமாவில் அறிமுகமானார். சில படங்களில் ஹீரோயினாக நடித்த வனிதாவுக்கு தொடர்ந்து சினிமா வாய்ப்பு அமையாததால் குடும்ப வாழ்க்கையில் ஈடுபடலாம் என்று திருமணம் செய்துகொண்டார். ஆனால், அவருக்கு திருமண வாழ்க்கையும் ஏமாற்றத்தையே அளித்தது. கருத்து வேறுபாடு காரணமாக வனிதாவின் 2 திருமணங்களும் விவாகரத்தில் முடிந்தன. வனிதாவுக்கு 2 மகள்கள் உள்ளனன். சிங்கிள் மதராக தனது மகள்களை வளர்த்து வருகிறார்
இந்த சூழலில்தான், வனிதாவுக்கு விஜய் டியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார். தனது வெளிப்படையான மற்றும் அதிரடியான இயல்பு மூலமாக சர்ச்சையை ஏற்படுத்தி பிரபலமானார். பிக் பாஸ் முடிந்த பிறகு, சினிமா தொழில்நுட்பப் பிரிவில் பணிபுரியும் பீட்டர் பாலை திருமணம் செய்துகொண்டார். பீட்டர் பால் ஏற்கெனவே திருமணம் ஆனவர் என்பதால் வனிதாவின் 3வது திருமணம் சர்ச்சையானது. விரைவில் பீட்டர் பாலும் - வனிதாவும் பிரிந்துவிட்டனர்.
இதையடுத்து, வனிதா விஜயகுமார் விஜய் டிவியின் குக் வித் கோமாளி சீசன் 1 நிகழ்ச்சியில் பங்கேற்று டைட்டிலை வென்றார். இதையடுத்து, விஜய் டிவியில் பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் பங்கேற்ற வனிதா அங்கே தனது வளர்ச்சியை தடுக்க சதி செய்கிறார்கள் என்று அதிலிருந்து விலகினார். இப்படி எல்லாவற்றிலும் சர்ச்சை புயலை கிளப்பிய வனிதா விஜயகுமார், தற்போது பிரபல நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் உடன் மாலை மாற்றிக்கொண்டு திருமணம் செய்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இதையடுத்து, வனிதா - பவர் ஸ்டார் சீனிவாசன் மாலை மாற்றிக்கொண்ட புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
And...❤️❤️❤️❤️ @powerstarhere pic.twitter.com/UXKaFiNJic
— Vanitha Vijaykumar (@vanithavijayku1) July 21, 2021
நடிகை வனிதா விஜயகுமார் தனது ட்விட்டர் பக்கத்தில், பிரபல நகைச்சுவை நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் உடன் மாலை மாற்றிக்கொண்டு திருமணம் செய்துகொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில், and 4 ஹார்ட்டின்கள் உடன் பவர் ஸ்டார் சீனிவாசனை டேக் செய்துள்ளார்.
— Power Star (@powerstarhere) July 21, 2021
வனிதாவும் பவர் ஸ்டார் சீனிவாசனும் கழுத்தில் மாலையுடன் இருக்கிற புகைப்படத்தைப் பார்த்த நெட்டிசன்கள் ரசிகர்கள் பலரும் அவர்கள் திருமணம் செய்துகொண்டதற்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள். அதே நேரத்தில், சிலர் வனிதா - பவர் ஸ்டார் சீனிவாசன் திருமணம் நிஜமா, இல்லை ஏதேனும் படத்தின் ஷூட்டிங்கின்போது எடுக்கப்பட்ட புகைப்படமா என்று நம்ப முடியாமல் சந்தேகத்தையும் எழுப்பி வருகின்றனர்.
பிரபல நகைச்சுவை நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன், கண்ணா லட்டு திண்ண ஆசையா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சீனிவாசனும் வனிதாவுடன் மாலை மாற்றிக்கொண்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.