நடிகை வனிதா விஜயகுமார் பீட்டர் பால் திருமணத்தால் எழுந்த சர்ச்சை கடந்த சில நாட்களாக அடங்காமா சர்ச்சை மேல் சர்ச்சை என்று ஓயாமல் தவுசன் வாலா பட்டாசு போல வெடித்து வருகிறது.
நடிகை வனிதா விஜயகுமார் பீட்டர் பால் என்ற சினிமா தொழில்நுட்ப கலைஞரை மூன்றாவதாக திருமணம் செய்துகொண்டார். பீட்டர் பால் முதல் மனைவியிடம் இருந்து பிரிந்து வாழ்ந்தாலும் விவாகரத்த் பெறாமல் வனிதாவை திருமணம் செய்துகொண்டதால் சர்ச்சை எழுந்தது.
இதனால், வனிதா - பீட்டர் பால் திருமணம் குறித்து நெட்டிசன்கள் பலரும் விமர்சனம் செய்துவந்தனர். சிலர் அவதூறுகளை வீசி வந்தனர். இதன் தொடர்ச்சியாக, ஒரு யூடியூப் சேனலில் வனிதா - லட்சுமி ராமகிருஷ்ணன் கலந்துகொண்ட விவாதம் சர்ச்சையானது. இதையடுத்து, கஸ்தூரி, ரித்திகா, ரவி, வனிதா உள்ளிட்டோர் கலந்துகொண்ட யூடியூப் சேனல் விவாதமும் சர்ச்சையானது.
இதனைத் தொடர்ந்து, வனிதா விஜயகுமார் தன்னைப்பற்றி அவதூறு செய்வதாக நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன், கஸ்தூரி, நடிகர் நாஞ்சில் விஜயன், தயாரிப்பாளர் ரவீந்திரன் ஆகியோர் மீது போலீசில் புகார் அளித்துள்ளார். மேலும், சூர்யா தேவி என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனிடையே, வனிதா விஜயகுமார், தஞ்சாவூரில் பலரும் இரண்டு பொண்டாட்டி உள்ளவர்கள் என்று கூறியதால் பாஜக சார்பில் புகார் கொடுக்கப்பட்டது. அதே போல, காங்கிரஸ் கட்சி சார்பிலும் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் பிரச்னையானதைத் தொடர்ந்து, “நான் தஞ்சாவூர் பெண் தான், அந்த ஊர் பெண் என்பதை பெருமையாக கூறுகிறேன்” என்று தெரிவித்து விளக்கம் அளித்துள்ளார்.மேலும், வனிதா, தவறாக பேசியிருந்தால் மன்னிக்கவும் தம்பிகளே தங்கச்சிகளே என்று பதிவிட்டுள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"