/indian-express-tamil/media/media_files/2025/08/27/screenshot-2025-08-27-111212-2025-08-27-11-12-36.jpg)
எம்ஜிஆர் சிவாஜி காலத்தில் இருந்தே தமிழ் சினிமாவில் நடித்து வருபவர் நடிகர் விஜயகுமார். அவருக்கு இரு மனைவிகள். இரண்டாவது மனைவியான நடிகை மஞ்சுளா. அவரும் பிரபல நடிகை என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தத்தில் விஜயகுமாரின் குடும்பத்தில் அனைவருமே சினிமாவில் தான் இருக்கிறார்கள். மகன் அருண் விஜய், மகள் வனிதா, மருமகன் ஹரி, பிரீத்தா என அனைவருக்கும் தெரிந்த சினிமா குடும்பம் தான் விஜயக்குமாரின் குடும்பம். அப்பாவைப் போல சிறுவயதிலேயே சினிமாவுக்கு வந்தவர் வனிதா. முதல் ஹீரோ ராஜ்கிரண்.
அதற்குப் பிறகு விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகருடன் நடித்த அவர் இடையில் காணாமல் போனார். தொடர்ந்து சினிமாவிலும் தொலைக்காட்சிகளிலும் தோன்றி வந்த அவர் முதன்முதலாக ஆகாஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவரை பிரிந்ததனால் விஜயகுமார் குடும்பத்துக்கும் வனிதாவுக்கும் பிரச்சனை ஏற்பட்டது. இடை இடையே தொழிலதிபர் ஒருவரையும், பீட்டர் என்பவரையும் திருமணம் செய்து கொண்டார். பிரபல நடன இயக்குனரான ராபர்ட் மாஸ்டருடனும் அவர் பழகியதாக கூறப்படுகிறது.
இதனால் சமூக வலைதளங்களில் அவருக்கு எதிராக கண்டனங்கள் எழுந்தது. ஆனால் திருமணம் என்பது மனம் சார்ந்தது என அவருக்கு ஆதரவும் இருந்தது. தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் பிரபலமானார். அங்கு அவரது நடவடிக்கைகள் அதிரடியாகவே இருந்தது. அதற்கு பிறகு அநீதி, அந்தகன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த அவர் இப்போது இயக்குனர் அவதாரத்தை எடுத்துள்ளார்.
தற்போது ராபர்ட் மாஸ்டர் நாயகனாக நடித்த மிஸஸ் அண்ட் மிஸ்டர் படத்தை இயக்கியுள்ளார் வனிதா. அந்த படத்தின் தயாரிப்பாளர் வனிதாவின் மகள் ஜோவிகா என்பது குறிப்பிடத்தக்கது. அந்தப் படத்தின் போஸ்டர்களை வைத்து ராபர்ட்டுக்கும் வனிதாவுக்கும் திருமணம் நடைபெற்று விட்டது என இடையில் வதந்தி கிளம்பியது வேறு கதை.
இவர் சமீபத்திய ஒரு நேர்காணலில் பேசுகையில், "நான் இந்த படத்தை உண்மையாக மனிதர்ககள் எப்படி இருப்பார்களோ அப்படி தான் எடுத்தேன். நான் ஒரு படம் பார்த்தேன். அந்த படத்தில் அனைவரும் டைனிங் டேபிளில் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருக்கும் போது மகள் கர்பமாக இருக்கிறார் என்று கூறுகிறார். அதற்க்கு அந்த அம்மா அப்படியா என்ன டி சொல்ற னு ரொம்ப கேசுவலாக பேசியிருப்பார். எனக்கு அதை பார்த்து செம கோவம். இது எப்படி ஒரு தாயின் பதிலாக இருக்க முடியும். நா அப்படியெல்லாம் நடிக்க மாட்டேன் எவ்வளவு காசு கொடுத்தாலும். ஆழ விடுங்க." என்று சிரிப்புடன் கூறியிருப்பார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.