பொறாமை… ஈகோ… வளர்ச்சியை தடுக்கிறார்கள்..! பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் இருந்து விலகிய வனிதா
வனிதா BB ஜோடிகள் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் தனது வளர்ச்சியை பிடிக்காதவர்கள் செய்யும் செயல்களால் அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
வனிதா BB ஜோடிகள் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் தனது வளர்ச்சியை பிடிக்காதவர்கள் செய்யும் செயல்களால் அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
Vanitha walkout from BB Jodigal show: நடிகை வனிதா விஜயகுமார் பிக் பாஸ் ஜோடிகள் என்ற நடன நிகழ்சியில் பங்கேற்று சில எபிசோடுகள் கடந்த நிலையில்ல் பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாகத் தெரிவித்திருப்பது சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Advertisment
தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமான வனிதா விஜயகுமார், தனது சினிமா பயணத்தின் 2வது இன்னிஸில் தொலைக்காட்சிகளில் பரபரபான சர்ச்சை நாயகியாக வலம் வருகிறார். அவருடைய தைரியமான வெளிப்படையான அதிரடியான பேச்சை பலரும் எதிர்கொள்ளத் தடுமாறுகிறார்கள்.
நடிகை வனிதா விஜயகுமார், பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சிக்கு பிறகு அவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் ரசிகளின் கவனத்தை ஈர்ப்பவராக இருந்து வருகிறார். தொடர்ந்து விஜய் டிவியில் குக் வித் கோமாளி சீசன் 1 நிகழ்ச்சியில் பங்கேற்று டைட்டிலை வென்றார். தற்போது, விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர்களை வைத்து பிக் பாஸ் ஜோடிகள் அதாவது பிபி ஜோடிகள் என்ற நிகழ்ச்சி தொடங்கப்பட்டு ரசிகர்கள் இடையே பிரபலமானது.
பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் முதலில் சிங்கிளாக வந்த வனிதா, இந்த நிகழ்ச்சியில் நடனம் ஆடுவதற்கு தனக்கு மட்டும் ஏன் ஜோடி தரவில்லை என்று கேள்வி எழுப்பினார். இதையடுத்து, அடுத்த எபிசோடில் இருந்து வனிதாவுக்கு பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் போட்டியாளர் சுரேஷ் சக்ரவர்த்தி ஜோடியாக வந்தார்.
Advertisment
Advertisements
BB ஜோடிகள் நிகழ்சிசில் கடந்த எபிசோடில் வனிதா விஜயகுமாரும் சுரேஷ் சக்ரவர்த்தியும் செமையாக நடனம் ஆடி ரசிகர்களைக் கவர்ந்தார்கள். இந்த சூழலில்தான், வனிதா விஜயகுமார், பிக்பாஸ் சீசன் 3 மூலம் பிரபலமான வனிதா விஜயகுமார் தொடர்ந்து குக் வித் கோமாளி, கலக்கப்போவது யாரு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
வனிதா தற்போது BB ஜோடிகள் நிகழ்ச்யில் போட்டியாளராக பங்குபெற்றார், அவருடன் சுரேஷ் சக்ரவர்த்தியும் நடனமாடி வந்தார்.
இதனிடையே வனிதா BB ஜோடிகள் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் தனது வளர்ச்சியை பிடிக்காதவர்கள் செய்யும் செயல்களால் அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
BB ஜோடிகள் வனிதா விலகியதைத் தொடர்ந்து, இந்த நிகழ்ச்சியில் அவருடன் ஜோடியாக பங்கேற்ற சுரேஷ் சக்ரவர்த்தியும் நிகழ்ச்சியை விட்டு போவதாக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
வனிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், “BB ஜோடிகள் நிகழ்ச்சியில் என்னுடைய காளி அவதாரம் குறித்து உங்களுடைய ஆதரவுக்கு ஊடகங்கள், ரசிகர்கல் என்னுடைய அனைத்து நலம் விரும்பிகள் அனைவருக்கும் நன்றி. நான் BB ஜோடிகள் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுகிறேன் என்பதை அறிவிக்கிறேன். நானும் ஒரு மனுஷிதான். அவர்கள் என்னுடைய குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும்கூட யாரிடமிருந்தும் கிண்டல், தொந்தரவு, துண்புறுத்தல்களை ஏற்றுக்கொள்ள முடியாது.” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அவருடைய அந்த அறிக்கையில், “நாம் ஒருவருக்கு ஒருவர் இடையே ஒரு பரஸ்பரம் மரியாதை எப்போதும் இருக்க வேண்டும். ஆனால், பணி இடத்தில் தொழில்முறை அல்லாத அறமற்ற நடத்தை இருப்பது ஏற்றுக்கொள்ள முடியாது. நான் தொந்தரவு செய்யப்பட்டேன். அவமானப்படுத்தப்பட்டேன். ஈகோ பிரச்னை காரணமாக என்னுடைய தொழில்முறை வளர்ச்சியை ஏற்றுக்கொள்ள முடியாதவர்களால் நான் நியாயமற்ற முறையில் நடத்தப்பட்டேன். பணியிடங்களில் ஆண்கள் மட்டும் அனுகூலத்தை எடுத்துக்கொள்வதில்லை. பெண்கள் உங்களுடைய வாய்ப்புகளை அழிப்பதில் மோசமாக மாறியிருக்கிறார்கள். ஊரடங்கு முடிவுக்கு வந்தால் நான் சினிமாவில் பிஸியாக இருப்பேன். என்னை சினிமாவிலும் டிவி நிகழ்ச்சிகளிலும் நீங்கள் என்னைப் பார்க்கலாம்.” என்று தெரிவித்துள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"