Advertisment
Presenting Partner
Desktop GIF

வனிதா விஜயகுமார் பிக் பாஸ் பிரபலத்தின் பெயர், தேதியைக் குறிப்பிட்டு வெளியிட்ட புகைப்படம் வைரல்

நடிகை வனிதா விஜயகுமார் தனது பெயருடன் பிக்பாஸ் பிரபலத்தின் பெயர் மற்றும் தேதியைக் குறிப்பிட்டு அவரே வெளியிட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
vanitha xyz

நடிகை வனிதா விஜயகுமார் தனது பெயருடன் பிக்பாஸ் பிரபலத்தின் பெயர் மற்றும் தேதியைக் குறிப்பிட்டு அவரே வெளியிட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகை வனிதா விஜயகுமார் தனது பெயருடன் பிக்பாஸ் பிரபலத்தின் பெயர் மற்றும் தேதியைக் குறிப்பிட்டு அவரே வெளியிட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisment

இன்றைய சமூக வலைதளங்களின் காலத்தில், 2-வது ரவுண்டில் வெற்றிகரமாக வலம் வருகிறார் நடிகை வனிதா விஜயகுமார். விஜயகுமார் - மஞ்சுளா தம்பதியின் மகளான வனிதா விஜயகுமார்,  இளம் வயதிலேயே நடிக்க தொடங்கினார். ஆனால், சினிமா அவருக்கு தொடர் வெற்றியைக் கொடுக்கவில்லை. அதனால், வனிதா விஜயகுமார் இடையில் காணாமல் போன நிலையில், விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் மீண்டும் பிரபலமானார்.

வனிதா விஜயகுமார் மட்டுமல்லாமல், அவரது மகள் ஜோவிகாவும் பிக்பாஸ் 7வது சீசனில் கலந்துகொண்டு பிரபலமானார். நடிகை வனிதா விஜயகுமாருக்கு மீண்டும் வாய்ப்புகள் வந்து குவிந்தன. சினிமா, டிவி சீரியல்களில் நடிக்க மீண்டும் வாய்ப்புகள் வந்தது. இதனால், சில சீரியல்களிலும் படங்களிலும் நடித்து வருகிறார்.

நடிகை வனிதா விஜயகுமாரின் தனிப்பட்ட திருமண வவாழ்க்கை ஏமாற்றத்திலேயே முடிந்தன. அதனால், சமூக வலைதளங்களில் தனது தனிப்பட்ட விஷயங்கள் பற்றி பேசி தாக்குபவர்களை செருப்பால் அல்ல எதைக்கொண்டு வேண்டுமானாலும் அடிப்பேன் என வனிதா விஜயகுமார் கோபமாக கூறியிருந்தார்.

வனிதா விஜயகுமார் செய்த 3 திருமணங்களும் பிரிவில் முடிந்துள்ள நிலையில், நடன அமைப்பாளர் ராபர்ட் மாஸ்டரை கூட காதலித்து வந்தார், ஆனால், அவர்களது காதல் நீடிக்கவில்லை.

vanitha robert

இந்த நிலையில் வனிதா விஜயகுமார், ராபர்ட் மாஸ்டரின் கையை பிடித்துக்கொண்டு கீழே உட்கார்ந்து காதலை வெளிப்படுத்தும் காட்சி போல இன்ஸ்டாகிராம் ஸ்டேட்டஸில் ஒரு புகைப்படம் வெளியிட்டு, அக்டோபர் 5 இந்த தேதியை  சேவ் செய்து வைத்துக்கொள்ளுங்கள் என பதிவிட்டுள்ளார். மேலும், தரையில பேசுனதெல்லாம், திரையில வருது அக்காவ் என்று ஒரு ஸ்டேட்டஸ் வைத்துள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள், வனிதா விஜயகுமாருக்கும் ராபர்ட் மஸ்டருக்கும் திருமணமா என கேள்வி எழுப்பி வருகின்றனர். அதே நேரத்தில், சிலர், இது படத்தின் தகவலாகவோ அல்லது பாடல் காட்சியின் புகைப்படமாகவோகூட இருக்கலாம், புரொமோஷனாகவும் இருக்கலாம் என கமெண்ட் செய்து வருகிறார்கள். 

நடிகை வனிதா விஜயகுமார் எதற்காக இந்த புகைப்படத்தை வெளியிட்டார் என்பதைத் தெரிந்துகொள்ள அக்டோபர் 5 வரை காத்திருந்தால் தான் தெரியும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Vanitha Vijayakumar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment