காளியாக புது அவதாரம் எடுத்த வனிதா : இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்

வனிதா இந்த புகைப்படம் குறித்து குறிப்பிடுகையில், “கல்தத்தா காளி, அவளுடைய கோபம் தீமைகளை அழிக்கும். கர்மா தொடங்குகிறது” என்று பதிவிட்டுள்ளார்.

vanitha vijayakumar, vanitha, vanitha kali makeup video, வனிதா விஜயகுமார், வனிதா, வனிதா காளி மேக்அப், வனிதா காளி வீடியோ, பிபி ஜோடிகள், பிக் பாஸ் ஜோடிகள், vanitha kali mekeup photo, bb jodigal, bigg boss jodigal, vijay tv, vanitha vijayakumar latest video, vanitha latest video

நடிகை வனிதா விஜயகுமார் சமூக ஊடகங்களில் சாதாரணமாக ஏதாவது ஒன்றை பதிவிட்டாலே பெரிய அளவில் வைரலாகிவிடும், அதிலும் இப்போது வனிதா காளி அவதார மேக்அப்பில் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி இணையத்தையே கலக்கி வருகிறது.

தமிழ் சினிமா உலகில் நடிகர் – நடிகை தம்பதியான விஜயகுமார் – மஞ்சுளாவின் மகள் நடிகை வனிதா விஜயகுமார். இவர் சந்திரலேகா படத்தில் விஜய்க்கு ஜோடியாக அறிமுகமானார். எதிர்பார்த்தபடி, சினிமா வெற்றிகரமாக அமையாததால், திருமணம் செய்துகொண்ட வனிதாவின் திருமண வாழ்வும் அவருக்கு பெரிய ஏமாற்றமாகவே அமைந்தது. அதனால், அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையும் பொதுவில் சர்ச்சையானது. தற்போது 2 மகள்களை ஒற்றைத் தாயாக வளர்த்து வரும் வனிதா விஜயகுமாருக்கு, நீண்ட இடைவெளிகுப் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலம் மீண்டும் சினிமா மற்றும் ஊடக வெளிச்சத்திற்கு வந்தார். அவருடைய தைரியமான கேரக்டருக்காக அதிக ரசிகர்களின் ஆதரவையும் விமர்சனத்தையும் பெற்றார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியை அடுத்து வனிதா விஜயகுமாருக்கு அடுத்தடுத்து விஜய் டிவி நிகழ்ச்சிகளில் வாய்ப்பு வழங்கப்பட்டது. குக் வித் கோமாளி சீசன் 1 நிகழ்ச்சியில் பங்கேற்று டைட்டிலை வென்றார். தற்போது விஜய் டிவியில் பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் பங்கேற்று கலக்கி வருகிறார். அதோடு, வனிதா விஜயகுமார் சமூக ஊடகங்களில் ஆக்டிவ்வாக செயல்பட்டு வருகிறார். சமூக ஊடகங்களில் அவர் என்ன பதிவிட்டாலும் பெரிய அளவில் வரைலாகிவிடும். இந்த சூழலில்தான், வனிதா காளி மேக்அப்பில் எடுத்த புகைப்படத்தை சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார்.

வனிதா புது அவதாரமாக காளி வேஷத்தில் இருக்கும் புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. வனிதா இந்த புகைப்படம் குறித்து குறிப்பிடுகையில், “கல்தத்தா காளி, அவளுடைய கோபம் தீமைகளை அழிக்கும். கர்மா தொடங்குகிறது” என்று பதிவிட்டுள்ளார். வனிதாவின் காளி மேக்அப் புகைப்படத்துக்கு நெட்டிசன்கள் பலரும் பலவிதமாக கம்மெண்ட் செய்துவருகிறார்கள்.

அதே நேரத்தில், வனிதா தனது மகள் வைரந்த காளி ஓவியத்தையும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அதில் வனிதா கூறியிருப்பதாவது: “என்னுடைய மகள் இதை வரைந்தாள்… ஒவ்வொரு பெண்ணும் நினைவில் கொள்ள வேண்டிய விஷயம்.. நம் அனைவருக்குள்ளேயும் ஒரு காளி இருக்கிறாள்… நமக்குத் தேவைப்படும்போது அவளை வெளியே கொண்டு வர வேண்டும்… நாம் அவளை வெளியே தேடக்கூடாது… எந்தவழியிலாவது துஷ்பிரயோகம் செயப்படுகிறபோது, நாம் அவளை வெளியே கொண்டு வரும் வரையில் தீமையை அழிக்க அவளால் நமக்கு உதவ முடியாது. உங்கள் காளியை உங்களுக்கு உள்ளே தேடுங்கள்…” என்று கூறியுள்ளார்.

வனிதா காளி மேக்அப் போட்டுள்ளது விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிபி ஜோடிகள் நிகழ்ச்சிக்காக போட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. அதனால், அடுத்த எபிசோடு பிபி ஜோடிகள் (பிக் பாஸ் ஜோடிகள்) நிகழ்ச்சி பற்றிய எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இப்போதே எகிறத் தொடங்கியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Vanitha vijaykumars kali makeup photo goes viral

Next Story
மேதகு : கதையை மறைக்கலாம்; வரலாற்றை மறைக்க முடியாது… நெட்டிசன் ரியாக்‌ஷன்ஸ்methagu movie, methagu, prabhakaran biopic, ltte, srilanka, மேதகு, மேதகு திரைப்படம், பிரபாகரன், விடுதலைப் புலிகள், நெட்டிசன் ரியாக்‌ஷன்ஸ், tamil politics, methagu movie netizen reactions, director kittu
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express

X