வந்தா ராஜாவா தான் வருவேன் திரைப்படத்தின் வாங்க மச்சான் வாங்க பாடலை தொடர்ந்து அனைத்து பாடல்களும் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
Advertisment
சுந்தர் சி இயக்கத்தில் சிம்பு, மஹத், மேகா ஆகாஷ், கேத்ரின் தெரசா ஆகியோர் இணைந்து நடித்துள்ள படம் வந்தா ராஜாவா தான் வருவேன். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைத்திருக்கிறார்.
வந்தா ராஜாவா தான் வருவேன் பாடல்
பிப்ரவரி 1ம் தேதி வெளியாக இருக்கும் இந்த படத்திற்கு தணிக்கை குழு யு சான்றிதழ் வழங்கியுள்ளது. இந்த அறிவிப்பை இன்று படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
முன்னதாக இப்படத்தின் வாங்க மச்சான் வாங்க பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. இந்நிலையில், படத்தின் முழு பாடல்கள் இன்று வெளியாகி உள்ளது. இப்படத்தில் மொத்தம் 6 பாடல்கள் இடம்பெற்றுள்ளது.