Advertisment

தீபாவளி பண்டிகையில் ரசிகர்களுக்கு சர்பிரைஸ் கொடுத்த சிம்பு

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
actor simbu, நடிகர் சிம்பு

actor simbu, நடிகர் சிம்பு

சுந்தர்.சி இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்து வரும் வந்தா ராஜாவாதான் வருவேன் என்ற படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியானது.

Advertisment

செக்கச்சிவந்த வானம் படத்தை தொடர்ந்து சிம்பு நடித்து வரும் இந்த திரைப்படம், தெலுங்கில் பவன்கல்யாண் நடித்த ‘அத்திரிண்டிக்கி தாரிடி’ படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காகும். சிம்பு, கேத்ரின் தெரசா, மேகா ஆகாஷ், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, ரோபோ ஷங்கர், மகத் உள்ளிட்ட ஏராளமானோர் நடித்து வருகின்றனர்.

நடிகர் சிம்பு நடிக்கும் வந்தா ராஜாவாதான் வருவேன் படம் போஸ்டர் ரிலீஸ்

லைகா நிறுவனம் தயாரிப்பில் ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்து வரும் இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று வெளியானது. இப்படத்தின் டைட்டில் ‘வி’ என்ற எழுத்தில் தொடங்கவிருப்பதாக படக்குழு ஏற்கனவே கூறியிருந்த நிலையில் இன்று அந்த ரகசியம் உடைக்கப்பட்டது.

இதையடுத்து, சிம்பு நடித்த ‘செக்கச்சிவந்த வானம்’ படத்தில் அவர் பேசிய ‘வந்தா ராஜாவா தான் வருவேன்’ என்ற வசனம் ரசிகர்களிடம் செம அப்லாஸ் வாங்கிய நிலையில், சுந்தர்.சி இயக்கி வரும் சிம்புவின் படத்துக்கு இந்த பெயரையே வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

Tamil Cinema Simbu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment