Vantha Rajavathaan Varuven teaser : நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள வந்தா ராஜாவா தான் வருவேன் படத்தின் டீசர் யூடியூபில் வெளியாகி யூடியூப் டிரெண்டிங்கில் முதல் இடத்தை பிடித்துள்ளது.
Advertisment
‘செக்கச்சிவந்த வானம்’ படத்தை தொடர்ந்து தனது இரண்டாவது இன்னிங்க்ஸை வெற்றிகரமாக தொடங்கியுள்ள நடிகர் சிம்பு, சுந்தர்.சி இயக்கத்தில் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இப்படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீசாகவுள்ள நிலையில், ரசிகர்களை குஷிப்படுத்தும் விதமாக இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் டீசர் கடந்த நவ.29ம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘2.0’ படம் ரிலீசானபோது திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.
Advertisment
Advertisements
இதையடுத்து நேற்று காலை 11 மணிக்கு யூடியூப் தளத்தில் ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், சில தொழில்நுட்ப கோளாறு காரணமாக சற்று தாமதமாக டீசர் ரிலீசானது. இருப்பினும், இந்த டீசரை இது வரை 28 லட்சத்திற்கும் மேற்பட்டட்டோர் பார்த்துள்ளனர். தற்போது யூடியூப் டிரெண்டிங்கில் முதல் இடத்தை பிடித்துள்ளது இந்த டீசர்.