திருமணமா? வாய்ப்பே இல்லை ராசா : சொல்கிறார் நடிகை வரலட்சுமி

Varalakshmi sarathkumar : நிஜ வாழ்க்கையில் தனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை. நான் யாரையும் திருமணம் செய்து கொள்ள மாட்டேன்

By: Updated: August 13, 2019, 06:15:03 PM

நிஜ வாழ்க்கையில் தனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை. நான் யாரையும் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று கன்னி ராசி பட விழாவில் நடிகை வரலட்சுமி சரத்குமார் கூறியுள்ளார்.

நடிகர் விமல் நடிப்பில் உருவாகியுள்ள படம் கன்னி ராசி. இந்த படத்தில் விமலுக்கு ஜோடியாக வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ளார். இவர்களுடன் பாண்டியராஜன், ரோபோ சங்கர், யோகி பாபு என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இந்த படத்தை இயக்குனர் எஸ். முத்துக்குமரன் இயக்கியுள்ளார். இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. விமல், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட படக்குழுவினர் இதில் பங்கேற்றனர்.

இதில் நடிகை வரலட்சுமி பேசியதாவது, பொதுவாகவே புது இயக்குநர்கள் என்றால் எனக்குப் பிடிக்கும். ஸ்கிரிப்ட் படிக்கும் போதே விழுந்து விழுந்து சிரித்தேன். இந்த டீம் செம எனர்ஜியாக இருந்தது. படமும் அதே எனர்ஜியாக இருக்கும். இந்த படம் காதல் திருமணத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. நிஜ வாழ்க்கையில் எனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை. நான் யாரையும் திருமணம் செய்து கொள்ள மாட்டேன். நான் இவ்வளவு நடிகர்களுடன் சேர்ந்து நடித்தது இல்லை. பாண்டியராஜன் சார், யோகிபாபு, ரோபோ சங்கர் என பலருடன் சேர்ந்து ஜாலியாக நடித்தேன். விமல் சிறந்த நடிகர். அவருடன் பணியாற்றியது புது அனுபவமாக இருந்தது. இப்படம் முழுக்க முழுக்க குடும்பங்கள் கொண்டாடும் ஒரு ஜாலியான படம்’ என்றார்.

நடிகை வரலட்சுமியை, தனது கனவுக்கன்னியாக பாவித்துக்கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு, இந்த செய்தி பேரிடியாக அமையும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்துமில்லை…

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Varalakshmi sarathkumar marriage vimal kannirasi

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X