/tamil-ie/media/media_files/uploads/2019/03/makkal-selvi-varalakshmi-sarathkumar.jpg)
Varalakshmi on Pollachi sexual assault
Pollachi Sexual Assault: பொள்ளாச்சி கூட்டு பலாத்காரம் தொடர்பாக வாய் திறக்காத பெரிய நடிகர்கள் மீது வருத்தத்தைத் தெரிவித்துள்ளார் நடிகை வரலட்சுமி.
தமிழகத்தையே உலுக்கியிருக்கும் பொள்ளாச்சி கூட்டு பலாத்காரத்திற்கு எதிராக பிரபலங்கள் பலரும் தங்களது, கண்டனத்தைப் பதிவு செய்து வருகின்றனர். அதோடு குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்பதும் அவர்களது முதன்மையான கோரிக்கை.
இந்நிலையில் தற்போது நடிகை வரலட்சுமி சரத்குமார், இந்த சம்பவம் தொடர்பாக பேசியுள்ளார். ”பாதிக்கப்பட்டவர்கள் இது பற்றி பேச வேண்டும் அப்போது தான் குற்றவாளிகளுக்கு தக்க தண்டனை வாங்கித் தர முடியும்.
பாலியல் பலாத்காரங்களைத் தடுக்க மரண தண்டனையே சரியான தீர்வு. இவ்வகை குற்றங்களுக்குப் பிணை கொடுக்கக்கூடாது.
பாதிக்கப்பட்டவர்கள் கதறும் வீடியோ எனக்கு கோபத்தை ஏற்படுத்துகிறது. விரக்தியை உண்டாக்குகிறது. இந்தப் பாலியல் குற்றங்கள் எல்லாம் சமூக வலைதளங்களில் கேலிக்கூத்தாக்கப்படுகிறது” என்றார்.
தமிழ் சினிமா உச்ச நட்சத்திரங்களின் அமைதி பற்றி வருவிடம் கேட்கப்பட்டது. “மீ டூ பிரச்னையின் போது பலர் வாய் திறக்கவில்லை என்பதை நினைவுக்கூறிய அவர், இந்த விஷயத்திலாவது உச்ச நட்சத்திரங்கள் பொது வெளியில் தங்களது கருத்துகளை முன் வைக்க வேண்டும். அவர்களின் குரலுக்கு மக்கள் மத்தியில் ஒரு பவர் இருக்கிறது.
இந்தப் பிரச்னை குறித்து இன்னும் ரஜினி, விஜய், அஜித் போன்ற உச்ச நட்சத்திரங்கள் இன்னும் வாய் திறக்கவில்லை. சமூகப் பிரச்னைகளுக்குக் குரல் கொடுக்கும் ரஜினி, விஜய் பொள்ளாச்சி சம்பவத்தில் அமைதியாக இருப்பது பொது மக்களிடத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.