/indian-express-tamil/media/media_files/uJr57XKULOwBZdk3XDKL.jpg)
நடிகர் சரத்குமாரின் மூத்த மகள் வரலட்சுமி நிக்கோலாய் திருமணம் ஜூலை 2ஆம் தேதி கோலாகலமாய் நடந்தது. நிக்கோலாய் தொழில் அதிபர் ஆவார்.
இந்நிலையில் செய்தியாளர் சந்திப்பில் இன்று பேசிய நிக்கோலாய் தமக்கு தமிழ் தெரியாது. தமிழில் தெரிந்த ஒரே வார்த்தை பொண்டாட்டி என்றார்.
மேலும் தமக்கு அழகான மனைவியும், நல்ல மாமனாரும் கிடைத்துள்ளார்.
நான் தமிழ் கற்றுவருகிறேன். விரைவில் தமிழ் கற்றுவிடுவேன். எனக்கு பூர்விகம் மும்பை கிடையாது. நான் சென்னையை நேசிக்கிறேன்” என்றார்.
வரலட்சுமி சரத்குமாரின் மருமகன் நிக்கோலாய்யின் இந்தப் பேச்சு சமூக வலைதளத்தில் வைரலாகிவருகிறது. நடிகை வரலட்சுமி தென்னிந்திய படங்களில் வில்லி உள்ளிட்ட முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார். அவரின் கைவசம் முக்கிய படங்கள் உள்ளன. நிக்கோலாய் தொழிலதிபராக உள்ளார். முன்னதாக நிக்கோலாய் உடனான காதலை வரலட்சுமி அறிவித்த போது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஏனெனில், நிக்கோலாய் ஏற்கனவே திருமணம் ஆனவர் ஆவார். அவருக்கு தோள் மேல் வளர்ந்த பெண் குழந்தை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.