/tamil-ie/media/media_files/uploads/2020/06/Varalaxmi-Sarathkumar-Danny-OTT-Release.jpg)
Varalaxmi Sarathkumar Danny OTT Release
Varalakshmi Sarathkumar: பிரபல OTT தளங்களில் நடிகைகள் ஜோதிகா மற்றும் கீர்த்தி சுரேஷின் படம் சமீபத்தில் வெளியானது. இதனைத் தொடர்ந்து தற்போது, வரலக்ஷ்மி சரத்குமாரின் 'டேனி' பட தயாரிப்பாளர்கள் அனைவரும், இந்த படத்தை பிரபல OTT தளங்களில் வெளியிட தயாராக உள்ளனர். இந்த படம் தஞ்சாவூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள, ஒரு கொலை மர்மத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. பி.ஜி.முத்தியாவின் உதவியாளரான எல்.ஜி.சத்தியமூர்த்தி இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.
இ-பாஸ் இல்லாமல் ஆம்புலன்சில் சென்ற பயணிகள்: வண்டலூரில் போலீஸ் மடக்கியது
’டேனி’ படத்தில் சயாஜி ஷிண்டே, வேல ராமமூர்த்தி, கவின், வினோத் கிஷன், துரை சுதாகர், பாலா மற்றும் ராமர் ஆகியோரும் நடித்துள்ளனர். இந்த படத்தில் ஒரு நாய் முக்கிய பங்கு வகிக்கிறது. டாக் ஸ்குவாடில் உள்ள ஒரு நாய்க்கும், பெண் போலீஸ் அதிகாரிக்கும் இடையிலான உணர்வுகளை சொல்கிறது. போலீஸ் அதிகாரி வேடத்தில் வரலக்ஷ்மி சரத்குமார் நடித்துள்ளார்.
அட, இவ்வளவுதானா..? நோய் எதிர்ப்பு சக்திக்கான விட்டமின் உணவுகள் இவைதான்
இப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி இசையமைக்கிறார். டிசம்பர் மாத தொடக்கத்தில் வெளியிடப்பட்ட இதன் டீசர் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.