தமிழ் தெலுங்கில் பல படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் நடிகை வரலட்சுமி சரத்குமார் சமீபத்தில் விமானத்தில் நடிகர் விஜயுடன் பயணித்த தருணங்கள் தொடர்பாக வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய். தமிழகம் மட்டுமல்லாது கேரளா ஆந்திரா என இந்தியா முழுவதும் ரசிகர்களை வைத்துள்ள விஜய்க்கு திரையுலகை சேர்ந்த சக நடிகர் நடிகைகளை ரசிகர்களாக உளளனர். அந்த வகையில் தமிழ் சினிமாவின் மூத்த நடிகர சரத்குமாரின் மகளும், நடிகையுமான வரலட்சுமி சரத்குமார் பல இடங்களில் தான் ஒரு விஜய் ரசிகை என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே தற்போது தனது ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விமானத்தில் நடிகர் விஜயுடன் பயணித்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். ஹைதராபாத் செல்லும் விமானத்தில் தனது சக பயணியாக வந்த தளபதி விஜய் பார்த்து இன்ப அதிர்ச்சியில் இருந்ததாக கூறியுள்ள வரலாட்சுமி, ஹைதராபாத் செல்ல இவ்வளவு நல்ல விமானம் இருந்ததில்லை… ஹாஹா எனக்குப் பிடித்தமான தளபதி நடிகர் விஜய் எனக்கு அடுத்தபடியாக. இருக்கிறார். சரியான விமானம்..சரியான நாள் என்று பதிவிட்டுள்ளார்.
கடந்த 2018-ம் ஆண்டு ஏ.ஆர்.ஆருகதாஸ் இயக்கத்தில் வெளியான சர்கார் திரைப்படத்தில் வரலக்ஷ்மி விஜயுடன் இணைந்து நடித்தார். ஒரு ஊழல் அரசியல்வாதியின் மகள் கோமளவல்லி என்ற வில்லி கேரக்டரில் நடித்த வரலட்சுமி தனது நடிப்பிற்காக பாராட்டுக்களை பெற்றார். அதனைத் தொடர்ந்து மாரி 2, வெல்வெட் நகரம் மற்றும் பொய்கள் குதிரை போன்ற படங்களில் நடித்தார்.
தற்போது சமந்தாவின் யசோதா மற்றும் பாலகிருஷ்ணா படம் என அரை டசனுக்கும் அதிகமான திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். விஜய் தற்போது தனது தமிழ்-தெலுங்கு என இருமொழி படமான வரிசு படப்பிடிப்பிற்காக சென்னை மற்றும் ஹைதராபாத் இடையே பயணித்துக்கொண்டு இருக்கிறார். வம்சி பைடிபள்ளி இயக்கி வரும் இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.
இதனிடையே சமீபத்தில் குறிப்பிடத்தக்க உடல் மாற்றத்தை சந்தித்ததாக புகைப்படங்ளை வெளியிட்ட வரலட்சுமி, “போராட்டம் உண்மையானது.. சவால் உண்மையானது. ஆனால் நீங்கள் விரும்பியதை அடைவதை எதுவும் தடுக்க முடியாது. நீங்கள் யார்.. நீங்கள் என்னவாக இருக்க வேண்டும் என்று யாராலும் சொல்ல முடியாது. நீங்களே உங்களுக்கு சவால் விடுங்கள்.. உங்களை நீங்களே போட்டியாளராக ஆக்குங்கள்.. நீங்கள் அடையக்கூடிய அளவைக் கண்டு நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.
4 மாத கடின உழைப்பில் இதைத்தான் நான் சொல்ல விரும்புகிறேன். உங்களுக்கு மகிழ்ச்சியைத் தருவதைச் செய்யுங்கள்.. மற்றவர்களை மகிழ்விக்ககும் விஷயங்களைச் செய்யுங்கள். உன்னால் என்ன செய்ய முடியும், என்ன செய்ய முடியாது என்று யாரும் சொல்ல வேண்டாம்.!!! நம்பிக்கை ஒன்றே உனது ஆயுதம்..!! என்று குறிப்பிட்டிருந்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil