போதைப்பொருள் தொடர்பான வழக்கில், விசாரணை நடத்த வேண்டும் என்று கூறி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) கோலிவுட் நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கு நோட்டீஸ் அனுப்பியதாகவும், இந்த வழக்கில் தற்போது வரலட்சுமி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் வெளியாகியள்ள தகவல் குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் வரலட்சுமி சரத்குமார், முக்கிய நடிகரான சரத்குமாரின் மகளாக சினிமாவில் அறிமுகமான இவர், தற்போது தெலுங்கு படங்களில் முக்கிய வில்லி நடிகையாக வலம் வருகிறார். இவரிடம் ஆதிலிங்கம் என்பவர் சில ஆண்டுகள் தனி உதவியாளராக பணியாற்றி வந்துள்ளார். தற்போது அவருக்கு போதைப்பொருள் மற்றும் ஆயுத விநியோகத்தில் சர்வதேச கடத்தல்காரர்களுடன் தொடர்பு இருப்பதை என்ஐஏ அதிகாரிகள் கண்டறிந்தனர்.
இதனைத் தொடர்ந்து தற்போது அவரை கைது செய்துள்ள என்.ஐ.ஏ அதிகாரிகள், அவரை காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். இந்த விசாரணையில், போதைப்பொருள் சப்ளை மூலம் கிடைக்கும் வருமானத்தை சினிமா துறையில் ஆதிலிங்கம் முதலீடு செய்வதை கண்டுபிடித்தனர். இதனிடையே போதைப்பொருள் வழக்கில் தொடர்புடைய முன்னாள் தனி உதவியாளர் (பிஏ) பற்றி விசாரிக்க கொச்சியில் உள்ள அலுவலகத்தில் ஆஜராகும்படி வரலட்சுமி சரத்குமாருக்கு என்.ஐ.ஏ அதிகாரிகள் கடந்த ஆண்டு நோட்டீஸ் அனுப்பியதாக தகவல்கள் வெளியானது.
இது தவறானத தகவல் என்று வரலட்சுமி சரத்குமார் அப்போதே விளக்கம் அளித்திருந்த நிலையில், தற்போது இந்த போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் வரலட்சுமி சரத்குமார் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இது குறித்து விளக்கம் அளித்துள்ள அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,
“நமது திறமையான ஊடகங்களில் பழைய போலிச் செய்திகளைப் பரப்புவதை விட எந்த செய்தியும் இல்லை என்பது மிகவும் வருத்தமளிக்கிறது. எங்கள் அன்பான பத்திரிகையாளர்களே, குறிப்பாக சுயமாக செய்திகளை வெளியிடும் செய்தித் தளங்கள் மற்றும் உங்கள் கட்டுரைகள், நீங்கள் ஏன் சில உண்மையான பத்திரிகைகளைச் தொடங்கக்கூடாது? உங்கள் பிரபலங்களில் குறைகளைக் கண்டறிவதை நிறுத்துங்கள், நாங்கள் செயல்படவும், மக்களை மகிழ்விக்கவும், எங்கள் வேலையைச் செய்யவும் முயற்சிக்கிறோம்.
நீங்கள் ஏன் உங்கள் வேலையை செய்யக்கூடாது? உங்கள் உண்மையான கவனம் தேவைப்படும் 1000 தீவிர பிரச்சனைகள் உள்ளன! எனது மௌனத்தை பலவீனத்தின் அடையாளமாக எடுத்துக் கொள்ளாதீர்கள். அவதூறு வழக்குகளும் இப்போது டிரெண்டிங்கில் உள்ளன..பொய்யான குப்பைகளையும் ஆதாரமற்ற செய்திகளையும் பரப்புவதை நிறுத்துங்கள். எங்களைப் பெருமைப்படுத்தும் பத்திரிகையை மீண்டும் கொண்டு வாருங்கள் என்று பதிவிட்டுள்ளார்.
என்.ஐ.ஏ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட வரலட்சுமி சரத்குமாரின் உதவியாளர், ஆதிலிங்கத்திடம் இருந்து ரூ.2,100 கோடி மதிப்புள்ள ரூ.300 கிலோ ஹெராயின், ஏகே 47 துப்பாக்கி, 9 எம்எம் துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டுள்ளது. சமீபத்தில் தனது காதலருடன் நிச்சயதார்த்தம் செய்துகொண்ட வரலட்சுமி சரத்குமார், தனுஷின் ராயன் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“