/indian-express-tamil/media/media_files/odFKQZBVEB0PCm7vaJyy.jpg)
நடிகை வரலட்சுமி சரத்குமார் துபாய்க்கு சென்று கல்யாண ஷாப்பிங் செய்யும் புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகை வரலட்சுமி சரத்குமார் தனது தந்தை சரத்குமார், அவரது வருங்கால கணவர் நிக்கோலாய் சச்தேவ் மற்றும் அவரது டீன் ஏஜ் மகள் காஷா நியா சச்தேவ் ஆகியோருடன் துபாய்க்கு சென்று கல்யாண ஷாப்பிங் செய்யும் புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வரலக்ஷ்மி சரத்குமார் மற்றும் நிக்கோலாய் சச்தேவ் திருமணம் ஜூலை மாதம் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதனால், வரலட்சுமி சரத்குமர் தனது திருமணத்தை முன்னிட்டு தனது குடும்பத்தினருடன் துபாய்க்கு கல்யாண ஷாப்பிங் சென்றுள்ளார். சரத்குமார் தனது மருமகன் மற்றும் மகளுடன் உள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஒரு வீடியோவில், சரத்குமார் வரலட்சுமி புகைப்படம் எடுப்பதாக நினைத்துக் கொண்டு நின்றுகொண்டிருந்ததாகவும் ஆனால் அப்போது வீடியோ எடுக்கப்பட்டது என்று கூறியிருக்கிறார்.
மற்றொரு வீடியோவில், வரலட்சுமி, அவரது தந்தை சரத்குமார், வருங்கால கணவர் நிக்கோலாய் மற்றும் அவரது மகள் காஷா ஆகியோர் துபாயில் உள்ள ஒரு மாலில் நடந்து செல்கிறார்கள்.
Got to meet our thalaivar @rajinikanth sir and invite him and latha aunty...thank you sir for always being so warm and loving..thank you @ash_rajinikanth for veinf so sweet as always..the apple didn't fall far from the tree..❤️❤️@realsarathkumar@realradikaa#chayadevi… pic.twitter.com/X2alVW8VoD
— 𝑽𝒂𝒓𝒂𝒍𝒂𝒙𝒎𝒊 𝑺𝒂𝒓𝒂𝒕𝒉𝒌𝒖𝒎𝒂𝒓 (@varusarath5) June 6, 2024
வரலட்சுமி சரத்குமார் தனது திருமணத்துக்கு தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலக பிரபலங்களை நேரில் சென்று அழைப்பிதழ் கொடுத்து வருகிறார். சமீபத்தில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் வீடுகளுக்குச் சென்று அழைப்பிதழ் கொடுத்தார்.
வரலட்சுமிக்கும் நிக்கோலாய்க்கும் இந்த ஆண்டு தொடக்கத்தில் மார்ச் மாதம் நிச்சயதார்த்தம் நடந்தது. இவர்களது திருமணம் கோலிவுட், டோலிவுட், அரசியல்வாதிகள் மற்றும் தொழிலதிபர்கள் கலந்து கொள்ளும் பிரமாண்டமான நிகழ்வாக நடக்க உள்ளது. நிக்கோலாய்க்கு இது இரண்டாவது திருமணம். காஷா அவரது முதல் மனைவியின் மகள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.