New Update
/indian-express-tamil/media/media_files/2024/11/02/rCnddm6UvhUYbqLMfbCR.jpg)
குடும்பத்தினருடன் தலை தீபாவளி கொண்டாட்டம்; வரலெட்சுமி சரத்குமார் வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரல்
நடிகை வரலெட்சுமி சரத்குமார் குடும்பத்தினருடன் தலை தீபாவளி கொண்டாடி வெளியிட்ட வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன.
நடிகர் சரத்குமாரின் மகளான வரலட்சுமி, தமிழ் சினிமாவில் போடா போடி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். பின்னர் தாரை தப்பட்டை, சண்டகோழி 2, சர்கார் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
இந்த நிலையில், வரலெட்சுமி சரத்குமார் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிக்கோலாய் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமணம் தமிழ்நாடு மற்றும் வெளிநாடு என கோலாகலமாக நடைபெற்றது.
இந்த நிலையில் தற்போது வரலட்சுமி அவருடைய கணவரோடு தலை தீபாவளி கொண்டாடி இருக்கிறார். வரலட்சுமியின் தீபாவளி கொண்டாட்டத்தில் சரத்குமாரின் குடும்பத்தினர் அனைவரும் கலந்து கொண்டிருக்கின்றனர். சரத்குமாரும் ராதிகாவும் தீபாவளி பரிசுகளை வரலெட்சுமிக்கும் அவரது கணவருக்கும் வழங்கினர்.
அப்போது எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வரலட்சுமி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பகிர்ந்து இருக்கிறார். இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. மேலும், ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.