வாரிசு மற்றும் துணிவு படங்களின் முதல் காட்சிகளுக்கு ஆயிரம் ரூபாய்க்கு மேல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
2023 பொங்கல் விஜய் மற்றும் அஜித் ரசிகர்களுக்கு திருவிழாவாக அமைந்துள்ளது. இந்த பொங்கல் பண்டிக்கைக்கு அஜித்தின் 'துணிவு', விஜய்யின் 'வாரிசு' ஆகிய இரண்டு தமிழ்ப் படங்கள் மட்டுமே வெளியாகின்றன. இதற்கான புக்கிங் ஆரம்பித்துள்ளது. சில ஆண்டுகளுக்குப் பிறகு விஜய் மற்றும் அஜித் படங்கள் நேரடியாக மோத உள்ளதால், மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படியுங்கள்: துணிவு vs வாரிசு: ‘சமமான திரைப் பகிர்வு, விரைவில் முன்பதிவு’ – திருப்பூர் சுப்ரமணியம்
'துணிவு' படத்தை அமைச்சர் உதயநிதி குடும்பத்திற்குச் சொந்தமான ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தமிழகம் முழுவதும் வெளியிடுகிறது. அதேநேரம் ’வாரிசு' படத்தை சென்னை, செங்கல்பட்டு, வட ஆற்காடு, தென் ஆற்காடு, கோவை ஆகிய ஏரியாக்களில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது.
இதற்கிடையில், 'துணிவு' படத்திற்கு நடுஇரவு 1 மணிக்கும், 'வாரிசு' படத்திற்கு விடியற்காலை 4 மணிக்கும் காட்சிகள் ஒளிப்பரப்ப இருக்கிறார்கள். இதற்காக இரண்டு படங்களுக்கும் குறைந்தபட்சக் கட்டணம் 1000 ரூபாய் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சில இடங்களில் ஆயிரம் ரூபாய்க்கு மேலும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
பின்னர், 8 மணி காட்சிகளில் இருந்து அரசு நிர்ணயித்துள்ள கட்டணங்களை வாங்க தியேட்டர்கள் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil