Varisu Box Office Collection Day 3: புதிதாக சேரும் தெலுங்கு கலெக்சன்; துணிவை தூக்கி அடிக்கும் வாரிசு

வாரிசு படத்தின் தெலுங்கு பதிப்பான ‘வாரசுடு’ படம் மூன்று நாட்கள்கழித்து இன்று முதல் ரிலீஸ் ஆவதால், பாக்ஸ்-கலெக்ஷன் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

Seeman said that actor Vijay will enter politics in 2026
2026ல் நடிகர் விஜய் அரசியலுக்கு வருகிறார் என சீமான் கூறினார்.

Varisu vs Thunivu Box Office Collection Day 3 Tamil News: தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக நடிகர் அஜித் – விஜய் உள்ளனர். இவர்களது நடிப்பில் உருவாகியுள்ள ‘துணிவு’, ‘வாரிசு’ திரைப்படங்கள் பொங்கலை முன்னிட்டு கடந்த 11 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. துணிவு திரைப்படம் வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருக்கிறது.வாரிசு திரைப்படம் குடும்ப உறவுகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.

இந்த இரு திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. வாரிசு திரைப்படம் 2 நாட்களில் உலக முழுவதும் ரூ. 80 கோடியும் , துணிவு திரைப்படம் 2 நாட்களில் உலக முழுவதும் ரூ.65 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியது.

இந்த நிலையில், விஜய்யின் வரிசு, அதன் மூன்றாவது நாள் வசூலில் சரிவைக் கண்டது, முதல் நாளில் வசூல் ரூ 26 கோடியிலிருந்து நேற்று வெள்ளிக்கிழமை ரூ 10 கோடியாக சரிந்தது. இண்டஸ்ட்ரி டிராக்கர் சாக்னில்க் கருத்துப்படி, படத்தின் மொத்த வசூல் சுமார் 57 கோடி ரூபாய். அஜித்தின் துணிவு படத்தை விட விஜய் நடித்த படம் சற்று முன்னிலையில் உள்ளது.

ஆனாலும், தெலுங்கு மாநிலங்களில் வாரிசு படத்தின் தெலுங்கு பதிப்பான ‘வாரசுடு’ படம் மூன்று நாட்கள்கழித்து இன்று முதல் ரிலீஸ் ஆவதால், தெலுங்கு பாக்ஸ்-கலெக்ஷன் அதிகரிக்கும் என்று இண்டஸ்ட்ரி டிராக்கர் ரமேஷ் பாலா தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

தவிர, பொங்கல் விடுமுறையும் இன்று முதல் தொடங்குவதால் இந்த இரண்டு படங்களுக்குமே நல்ல வசூல் கிடைக்க வாய்ப்பிருக்கிறது என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Varisu box office collection competing head to head with thunivu tamil news

Exit mobile version