பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாக உள்ள விஜயின் வாரிசு பாடத்தை தில் ராஜூ தயாரித்துள்ள நிலையில், அதே நாளில் வெளியாகும் அஜித்தின் துணிவு படத்தின் வெளியீட்டு உரிமையையும் வாங்கியுள்ளார்.
தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவர் தில் ராஜூ. தற்போது விஜய் நடிப்பில் வாரிசு படத்தை தயாரித்துள்ளார். இந்த படம் பொங்கல் தினத்தை முன்னிட்டு வரும் ஜனவரி 12-ந் தேதி வெளியாக உள்ள நிலையில், படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் நடத்தப்பட்ட வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா நல்ல வரவேற்பை பெற்றது.
அதே போல் எச்.வினோத் இயக்கத்தில் 3-வது முறையாக அஜித் நடித்துள்ள படம் துணிவு. உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த படமும் வாரிசு படத்திற்கு போட்டியாக ஜனவரி 12-ந் தேதி வெளியாக உள்ளது. இந்த இரு படங்களும் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், விஜயின் வாரிசு படத்தை தயாரித்துள்ள தில் ராஜூ துணிவு படத்தின் தெலுங்கு வெளியீட்டு உரிமையை பெற்றுள்ளார். ஆந்திரா பாக்ஸ் ஆபிஸ்.காம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தெகிம்பு (துணிவு) என்ற தெலுங்கு பதிப்பு நிஜாம் மற்றும் வைசாக் பகுதிகளில் வெளியீடம் உரிமையை தில் ராஜு பெற்றுள்ளார் என்று குறிப்பிடப்பட்டுள்து.
சமகால போட்டி நடிகர்களாக இருக்கும் விஜய் – அஜித் படங்கள் ஒரே நாளில் வெளியாவது ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. வாரிசு படத்தை தெலுங்கு மாநிலங்களில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ள தில் ராஜூ, தெகிம்பு (துணிவு) படத்தை தெலுங்கு மாநிலங்களின் முக்கிய பகுதிகளிலும் விநியோகம் செய்யவுள்ளார். இந்த நடவடிக்கை தில் ராஜூவின் புத்திசாலித்தனத்தை காட்டுகிறது.
தமிழகத்தில் வாரிசு படத்தை விட துணிவு படத்திற்கு அதிக தியேட்டர்கள் ஒதுக்கியிருப்பதாக வெளியான தகவலை தொடர்ந்து, அஜித்தை விட விஜய் தான் பெரிய ஸ்டார் என்று ராஜு தெரிவித்திருந்தார். “தமிழகத்தில் எனது படத்துடன் அஜித் சார் படம் வெளிவருகிறது. தமிழ்நாட்டில் விஜய் சார் நம்பர் 1 ஸ்டார். அது எல்லோருக்கும் தெரியும். மாநிலத்தில் 800-க்கும் மேற்பட்ட திரைகள் உள்ளன, மேலும் 400-க்கும் மேற்பட்ட திரைகளைத் தருமாறு கேட்கிறேன். நான் குறைந்தது 50 ஸ்கிரீன்கள் தேவை. இது வியாபாரம். என்னிடம் ஒரு பெரிய படம் இருந்தாலும், நான் ஸ்கிரீனுக்காக கெஞ்ச வேண்டிய நிலை உள்ளது, ”என்று கூறி தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரம் யார் என்பது பற்றிய புதிய விவாதத்தைத் தூண்டினார்.
தில் ராஜுவின் இந்த கருத்தை பிடிக்காத அஜித் ரசிகர்கள் எதிர்ப்பை தெரிவித்தாலும், அதனை பொருட்படுத்தாமல், ராஜூ தன் நிலைப்பாட்டில் இருந்து வரும் நிலையில், விஜய்யின் முந்தைய படங்களின் பாக்ஸ் ஆபிஸ் பதிவுகளை சுட்டிக்காட்டி அவர் தனது கருத்துக்களை மீண்டும் மீண்டும் கூறினார்.
விஜய் நடிப்பில் வெளியாக கடைசி 5 அல்லது 6 திரைப்படங்கள் தமிழ்நாட்டில் மட்டும் 60 கோடி ரூபாய்க்கு மேல் ஷேர் செய்த படங்கள் என்றும், வெற்றிப்படமா தோல்வியா என்பது வேறு. ஆனால், அவை நிலையாக இருந்துள்ளன. இதனால், அவர் இப்போது பெரிய ஸ்டார் என்று ராஜு தெரிவித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil