Advertisment

வாரிசு ரூ 210 கோடி; துணிவு ரூ 87 கோடி: பாக்ஸ் ஆபீஸ் கிங் என நிரூபித்த விஜய்

அஜித்தின் துணிவு திரைப்படம் ரூ.87 கோடி வசூலித்துள்ள நிலையில், விஜய்யின் வாரிசு படம் ரூ.210 கோடியை வசூலித்துள்ளதால், விஜய் பாக்ஸ் ஆஃபீஸ் கிங் என நிரூபித்துள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
varisu, thunivu, varisu box office, thunivu box office, varius vs thunivu, வாரிசு, வாரிசு வசூல், துணிவு வசூல், விஜய், அஜித், varisu box office collection, thunivu ajith kumar, vijay varisu

விஜய்யின் வாரிசு திரைப்படம் செவ்வாய்க்கிழமை இரட்டை இலக்க வசூலை பதிவு செய்தாலும், ஒப்பிட்டளவில் அஜித்தின் துணிவு திரைப்படம் வசூலில் குறைந்துவிட்டது. ஆனாலும், துணிவு இன்னும் ஆரோக்கியமான மொத்த வசூலை பதிவு செய்துள்ளது.

Advertisment

நடிகர் விஜய்யின் வாரிசு திரைப்படம் திரையரங்குகளில் வசூலைக் வாரிக் குவித்து வருகிறது. கமர்ஷியல் படமான வாரிசு படத்தைப் பார்க்க திரையரங்குகளில் மக்கள் கூட்டம் கூட்டமாக குவிந்து வருகின்றனர். வாரிசு படம் வெளியாகி 7 நாட்கள் ஆன நிலையில், பாக்ஸ் ஆபிஸில் இரட்டை இலக்க வசூலை பதிவு செய்துள்ளது. . அதே நாளில் வெளியான அஜித்தின் துணிவு திரைப்படம், விஜய்யின் வாரிசு படத்தைவிட சற்று பின் தங்கியிருந்தாலும், ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.

வாரிசு திரைப்படம் இந்தியா டுடே செய்தியின்படி, செவ்வாய்க்கிழமை அன்று சுமார் ரூ.17 கோடி வசூல் செய்துள்ளது. திரைப்பட வர்த்தக ஆய்வாளர் ராஜசேகர் தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழகத்தில் பாக்ஸ் ஆபிஸில் வாரிசு மற்றும் துணிவு இரண்டிற்கும் ஒரு அசாதாரணமான நாள். நாளை முதல் உண்மையான ஆட்டம் தொடங்குகிறது. வாரிசு படம் செவ்வாய்க்கிழமை வசூலில் ரூ. 17 கோடி சேர்த்துள்ளதால் அதன் மொத்த வசூல் சுமார் ரூ.120 கோடி ஆகியுள்ளது.” என்று குறிபிட்டுள்ளார்.

இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. திரைப்பட வர்த்தக நிபுணர் ரமேஷ் பாலா அயர்லாந்து மற்றும் நார்வேயில் வாரிசு படத்தின் வசூலைப் பகிர்ந்துள்ளார். அவர் ட்விட்டரில், “அயர்லாந்தில் ஜனவரி 15 ஆம் தேதி வரை வாரிசு படம் 19,978 யூரோக்களை வசூலித்துள்ளது..” என்று குறிப்பிட்டுள்ளார். மற்றொரு ட்வீட்டில், வாரிசு நார்வேயில் ஜனவரி 13 முதல் ஜனவரி 16 வரை 59,246 அமெரிக்க டாலர்களை வசூலித்துள்ளது.”என்று தெரிவித்துள்ளார்.

வாரிசு படம் உலக அளவில் சுமார் ரூ.210 கோடி வசூலித்துள்ளதாக தயாரிப்பாளர்கள் புதன்கிழமை தெரிவித்தனர். “மெகா பிளாக்பஸ்டர் திரைப்படம் உளக அளவில் 7 நாட்களில் ரூ.210 கோடியை தாண்டி உங்கள் அன்பை மூன்று மடங்காக பெற்ற்ருள்ளது” என்று ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் ட்வீட் செய்துள்ளது.

அஜித்தின் துணிவு திரைப்படத்தின் மொத்த வசூல் திங்கள்கிழமை வரை ரூ.78.20 கோடியாக இருந்தது. செவ்வாய்கிழமை அதன் மொத்த வசூலில் மேலும் ரூ.9 கோடி சேர்த்தது. தற்போது, துணிவு படத்தின் மொத்த வசூல், வெளியான ஏழு நாட்களுக்குப் பிறகு, ரூ 87.20 கோடி என்று இண்டஸ்ட்ரி டிராக்கர் சாக்னில்க் தெரிவித்துள்ளது. ஹெச். வினோத் இயக்கிய இப்படம் வெளிநாடுகளிலும் நல்ல வசூலை குவித்துள்ளது. துணிவு திரைப்படம் சர்வதேச சந்தையில் அஜித்தின் மிகப்பெரிய படமாக உருவெடுத்துள்ளது. ரமேஷ் பாலா ட்விட்டரில், “நடிகர் அஜித்குமாரின் வெளிநாடுகளில் அதிக வசூல் செய்த படமாக துணிவு இருக்கும்..” என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், விஜய் நடித்துள்ள படத்திற்கு வரும் விமர்சனங்களுக்கு எதிராக வாரிசு இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி பேசியுள்ளார். வம்சி கூறுகையில், “விமர்சகர்களை நான் அவமரியாதை செய்வதில்லை. ஆனால், நான் ஒன்று சொல்ல விரும்புகிறேன். திரைப்படம் எடுப்பதற்கான எனது நோக்கம் விமர்சகர்கள் அல்ல. நான் கமர்ஷியல் படங்கள் பண்ண வந்திருக்கேன். நான் பார்வையாளர்களுக்காக திரைப்படங்களை உருவாக்குகிறேன். விமர்சகர்களின் கருத்துக்கள் அகநிலை. நீங்கள் ஏற்கனவே ஒரு படத்தை மதிப்பிடுகிறீர்கள், அது உங்கள் வேலை மற்றும் தனிப்பட்ட கருத்து” என்று கூறினார்.

துணிவு திரைப்படம் பார்வையாளர்கள் மற்றும் விமர்சகர்களிடமிருந்து கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் துணிவு படத்திற்கு மூன்று நட்சத்திர மதிப்பீட்டை வழங்கியது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Tamil Cinema Ajith Vijay
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment