அர்ஜூன் ரெட்டி தமிழ் ரிமேக்கான வர்மா படத்தில் நடிகர் துருவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை நடிக்க இருப்பதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கில் ஹிட் அடித்த அர்ஜூன் ரெட்டியை விக்ரம் மகன் துருவை வைத்து இ4 எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தமிழில் ‘வர்மா’ என்கிற தலைப்பில் உருவாக்கியது. இப்படத்தை பாலா இயக்கியிருந்தார்.
ஆனால், படத்தின் இறுதி வடிவம் தங்களுக்கு திருப்தி அளிக்காததால் படத்தை கை விடுவதாகவும், துருவை வைத்து மீண்டும் அப்படத்தை உருவாக்கப் போவதாகவும் சமீபத்தில் அறிவித்தனர். ஆனால், நான்தான் இப்படத்திலிருந்து விலகினேன் என இயக்குனர் பாலாவும் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார்.
வர்மா படத்தின் கதாநாயகி அறிமுகம்
இந்நிலையில், இப்படத்தை இயக்க பலரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல், மீண்டும் எடுக்கப்படவுள்ள வர்மா படத்தில் துருவுக்கு ஜோடியாக பானிதா சந்து நடிக்க இருப்பதாக தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
February 2019
இவர் அமெரிக்காவில் பிறந்த இந்திய பெண்மணி. லண்டனில் பட்டபடிப்பை படித்துவிட்டு மாடலிங் உலகில் சாதித்தவர். பாலிவுட் நடிகர் வருண் தவானுடன் இணைந்து அக்டோபர் என்ற படத்தில் நடித்துள்ளார். அக்டோபர் படம் தான் இவருக்கு அறிமுகப்படம்.
/tamil-ie/media/media_files/uploads/2019/02/1523522750-Banita_Sandhu.jpg)
முதல் படம் இன்னும் வெளியாக நிலையில், தமிழில் இப்படிப்பட்ட ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது இவருக்கு மகிழ்ச்சியை அளித்திருக்கிறது. பலரும் இவர் இந்த கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்துவார் என்றும் கூறி வருகின்றனர்.