scorecardresearch

பாலா இயக்கிய ‘வர்மா’ படம் டிராப்! மீண்டும் ரீ ஷூட்! அதிர்ச்சி அளித்த தயாரிப்பு நிறுவனம்

மீண்டும் இதே நாயகனை வைத்து, வேறு இயக்குனர், வேறு தொழில்நுட்ப குழு கொண்டு அர்ஜுன் ரெட்டி படம் ரீமேக் செய்யப்படும்

பாலா இயக்கிய ‘வர்மா’ படம் டிராப்! மீண்டும் ரீ ஷூட்! அதிர்ச்சி அளித்த தயாரிப்பு நிறுவனம்

பாலா இயக்கத்தில் நடிகர் விக்ரமின் மகன் துருவ் நடித்துள்ள ‘வர்மா’ திரைப்படம் மீண்டும் முழுவதுமாக ரீ ஷூட் செய்யப்படும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டோலிவுட்டில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் 2017ல் ரிலீசான படம் திரைப்படம் அர்ஜுன் ரெட்டி. வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் சென்சேஷனல் ஹிட் அடித்த இப்படத்தை, தமிழில், விக்ரமின் மகன் துருவை வைத்து பாலா இயக்கியுள்ளார். துருவ்விற்கு ஜோடியாக மேகா நடித்துள்ளார். மேலும், முக்கிய வேடங்களில் ஈஸ்வரி ராவ், ரைசா வில்சன் நடித்துள்ளனர். இதனை ‘E4 எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் தயாரித்தது. ரதன் இசையமைத்த இப்படத்திற்கு சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

பிப்ரவரி மாதத்தை குறிவைத்து ரிலீசாகவிருந்த இப்படத்தின் டிரைலர் கடந்த ஜன.9ம் தேதி வெளியிடப்பட்டது. இந்நிலையில், அதிர்ச்சி தரும் விஷயமாக, வர்மா படத்தை முழுவதும் கைவிடுவதாக தயாரிப்பு நிறுவனமான ‘E4 எண்டர்டெயின்மெண்ட்’ அறிவித்திருக்கிறது.

இதுகுறித்து அந்நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பாலா இயக்கியுள்ள ‘வர்மா’ படத்தில் இறுதி பதிப்பை பார்த்தோம். நாங்கள் அதில் மகிழ்ச்சி அடையவில்லை. ஆகையால், இப்படம் கைவிடப்படுகிறது. மீண்டும் இதே நாயகனை வைத்து, வேறு இயக்குனர், வேறு தொழில்நுட்ப குழு கொண்டு அர்ஜுன் ரெட்டி படம் ரீமேக் செய்யப்படும்’ என்று தெரிவித்துள்ளது.


பாலா எனும் புகழ்பெற்ற இயக்குனர் இயக்கிய வர்மா திரைப்படம், தங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை என்று தயாரிப்பு நிறுவனம் கூறியிருப்பது கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Varma dropped dhruv vikram director bala