பாலாவின் ‘வர்மா’: ஓடிடி-யில் வெளியான அன்றே ரிலீஸ் செய்த தமிழ்ராக்கர்ஸ்

Varma Full Movie in tamilrockers: தமிழ் ராக்கர்ஸ் விக்ரம் மகன் நடித்ட இயக்குனர் பாலா இயக்கிய வர்மா படத்தை வெளியிட்டுள்ளதால் தயாரிப்பாளர், படக்குழுவினர் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

By: October 6, 2020, 8:29:16 PM

Varma Full Movie in tamilrockers: தெலுங்கில் சூப்பர் ஹிட்டான அர்ஜுன் ரெட்டி படத்தை இயக்குனர் பாலா நடிகர் விக்ரம் மகன் துருவ்வை வைத்து இயக்கிய வர்மா திரைப்படம் ஓ.டிடி-யில் வெளியான அன்றே தமிழ் ராக்கர்ஸ் சட்ட விரோதமாக இணையத்தில் லீக் செய்துள்ளது.

தெலுங்கு சினிமாவில் 2017-ம் ஆண்டு அர்ஜுன் ரெட்டி என்ற திரைப்பட ம் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்தப் படத்தை தமிழில் இயக்குனர் பாலா இயக்கத்தில் நடிகர் விக்ரம் மகன் துருவ் நடிப்பில் தயாரிப்பாளர் முகேஷ் மேத்தாவின் இ4 எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரித்தது. இந்தப் படத்தில், நடிகை விக்ரம் மகன் துருவ் விக்ரம் மேகா சௌத்ரி என்ற கதாபாத்திரத்தில் ஹீரோவாக அறிமுக நடிகராக நடித்தார். துருவ் விக்ரமுடன் இந்தப் படத்தில், ஈஸ்வரி ரவ், ரைஸா வில்சன், ஆகாஷ் பிரேம்குமார் உள்ளிட்டோர் முக்கிய கதா பாத்திரங்களில் நடித்தனர். வர்மா படத்துக்கு இசையமைப்பாளர் ரதன் எம் இசையமைத்திருந்தார். இவர்தான் ஆதித்ய வர்மா படத்திற்கும் இசையமைத்தார்.

வர்மா படம் பாலா இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்க தயாரித்து முடிக்கப்பட்ட நிலையில், இந்த படம் எதிர்பார்த்தபடி சரியாக வரவில்லை என்று இயக்குனர் பாலாவுக்கு தயாரிப்பாளருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் திரையரங்கில் வெளியிடாமல் கைவிடப்பட்டது.

ஆனால், அதே அர்ஜூன் ரெட்டி கதையை துருவ்வை வைத்து தான் எதிர்பார்த்தபடி தயாரிக்க முடிவு செய்த தயாரிப்பாளர் முகேஷ் மேத்தா இயக்குனர் கிரீஸ்சாயாவை இயக்கத்தில் துருவ் நடிப்பில் ஆதித்ய வர்மா என்ற பெயரில் தயாரித்தார். இந்த படம் 2019-ம் ஆண்டு வெளியானது.

அதே நேரத்தில், துருவ் நடிப்பில் இயக்குனர் பாலா முதலில் இயக்கிய வர்மா படம் வெளியாகுமா என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இருந்துவந்தது. இந்த நிலையில், துருவ் விக்ரமை வைத்து பாலா இயக்கிய வர்மா திரைப்படம் ஓ.டிடி.யில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. வர்மா படம் ஓ.டி.டியில் வெளியானதைத் தொடர்ந்து, புது படங்களை உடனடியாக சட்டவிரோதமாக இணையதளத்தில் வெளியிடும் தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் வெளியிட்டுள்ளது.

எந்த புதுப்படம் வந்தாலும் திருட்டுத் தனமாக வெளியிட்டு திரையுலகினரை கதிகலங்கடிக்கும் தமிழ் ராக்கர்ஸ், இயக்குனர் பாலாவுக்கும் தயாரிப்பாளருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடால், வெளியாகமல் நின்றுபோன வர்மா படத்தையும் விட்டுவைக்கவில்லை.

கொரோனா பொது முடக்கத்தால் திரையரங்குகள் மூடப்பட்டதால், பொன்மகள் வந்தாள், பெண்குயின், க.பெ ரணசிங்கம் உள்பட பல படங்கள் ஓ.டி.டி-யில் வெளியிடப்பட்டன. அந்த படங்களையும் தமிழ்ராக்கர்ஸ் வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தினார்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Varma full movie in tamilrockers online varma movie leaked in tamilrockers dhruv vikram bala

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X