/tamil-ie/media/media_files/uploads/2018/12/Varma-Movie-release.jpg)
Varma Movie release
Varma Movie release date : பாலா இயக்கத்தில், நடிகர் விக்ரம் மகன் துரூவ் விகரம் நடிக்கும் வர்மா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது
தெலுங்கில் ‘பெல்லி சூப்புலு’ புகழ் விஜய் தேவரகொண்டா நடித்து கடந்த ஆண்டு (2017) வெளியான படம் ‘அர்ஜுன் ரெட்டி’. இப்படம் டோலிவுட் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதன் தமிழ் ரீமேக்கில் விஜய் தேவரகொண்டா ரோலில் விக்ரமின் மகன் துருவ் நடித்துள்ளார்.
Varma Movie release date : வர்மா படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
கோலிவுட்டில் முன்னணி நடிகர்களில் ஒருவரான விக்ரமின் மகன் துருவ் அறிமுகமாகும் முதல் படம் இதுதான். ‘வர்மா’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை இயக்குநர் பாலா இயக்கி வருகிறார். துருவ்விற்கு ஜோடியாக மேகா நடித்துள்ளார். மேலும், முக்கிய வேடங்களில் ஈஸ்வரி ராவ், ரைசா வில்சன் நடித்துள்ளனர். இதனை ‘E4 எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் தயாரிக்கிறது. ரதன் இசையமைக்கும் இப்படத்திற்கு சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
Advance Happy Valentines day wishes! #Varma
Ps: Sorry singles pic.twitter.com/xmYfyphmsT
— Dhruv Vikram (@itsdhruvvikram) 16 December 2018
சமீபத்தில், வெளியிடப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் டீசர் ரகர்களிடம் செம லைக்ஸ் குவித்து வைரலானது. இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது, இந்த படத்தை வருகிற பிப்ரவரி மாதம் காதலர் தினம் ஸ்பெஷலாக ரிலீஸ் செய்ய படக்குழுவினர் முடிவெடுத்துள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.