Advertisment

கைவிடப்பட்ட வர்மா... மீண்டும் இயக்க இருப்பது இந்த பிரபல இயக்குநர் தான்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Varma Movie release, வர்மா

Varma Movie release

பாலா இயக்கிய வர்மா படம் கைவிடப்பட்ட நிலையில் அதே படத்தை மீண்டும் இயக்க போகும் இயக்குநர் யார் என்ற தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.

Advertisment

E4 என்டர்டைன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் பாலா இயக்கத்தில் துருவ் விக்ரம் அறிமுக நாயகனாக நடித்துள்ள திரைப்படம் வர்மா. இம்மாதம் வெளியாக இருந்த இந்த திரைப்படத்தை பாலா சரியாக இயக்கவில்லை. படம் கொஞ்சம் கூட அர்ஜூன் ரெட்டியோடு ஒத்து போகவில்லை என கூறி தரிப்பு நிறுவனம் இப்படத்தை கை விட்டது.

வர்மா படத்தை மீண்டும் இயக்கும் கௌதம் மேனன்

மேலும் புதிய இயக்குனர் மற்றும் புதிய டீமுடன் இப்படத்தின் படப்பிடிப்புகள் மீண்டும் நடத்தி ஜூன் மாதத்தில் படத்தை வெளியிடுவோம் எனவும் தயாரிப்பு நிறுவனம் அறிவித்து இருந்தது.

இதனையடுத்து வர்மா படத்தை மீண்டும் யார் இயக்குவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகவே நிலவி வந்தது. தற்போது இது குறித்த தகவல் ஒன்று கசிந்துள்ளது.

அதாவது காதல் கதைகளை இயக்குவதில் திறமை படைத்த கெளதம் மேனன் இப்படத்தை இயக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் தற்போது அதற்கான பேச்சு வார்த்தைகள் நடந்து வருவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment