Varshini Arza joins new Poovarasi in Sun TV Poove Unakaga serial: சன் டிவியின் பூவே உனக்காக சீரியலில் பூவரசி கதாப்பாத்திரத்தில் வர்ஷினி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Advertisment
சன் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் பூவே உனக்காக சீரியலுக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இந்த சீரியலில் அசீம் மற்றும் ராதிகா பிரீத்தி முன்னனி கதாப்பாத்திரத்தில் நடித்து வந்தனர். இந்த ஜோடி சீரியல் ரசிகர்களால் பெரிதும் விரும்பப்பட்டது. அதேநேரம் பூவரசியாக நடித்த ராதிகா பிரீத்திக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
சீரியல் நல்ல நிலையில் சென்று கொண்டிருந்த நிலையில், திடீரென ராதிகா பிரீத்தி சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த ரசிகர்கள், புதிய பூவரசியாக யார் நடிக்கப் போகிறார்கள் என ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர்.
இந்த நிலையில், புதிய பூவரசியாக அக்னி நட்சத்திரம் சீரியலில் நடித்து வரும் வர்ஷினி அர்ஷா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை வர்ஷினியே அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
பூவரசியாக நடிக்க உள்ள வர்ஷினிக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil