Advertisment

பாலிவுட் நட்சத்திரங்களின் திருமண கனவை சிதைத்த கொரோனா...

தாய்லாந்தில் திருமணம் செய்துக் கொண்டாலும், மும்பையில் மிக பிரமாண்டமான வரவேற்பு நிகழ்வையும் நடத்த வருண் - நடாஷா ஜோடி திட்டமிட்டிருந்ததாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Varun Dhawan Natasha Dalal, Richa Chadha Ali Fazal Wedding Postponed due to Coronavirus

Varun Dhawan Natasha Dalal, Richa Chadha Ali Fazal Wedding Postponed due to Coronavirus

Varun Dhawan : கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மட்டுமல்ல, திரைப்பட நட்சத்திரங்களும் தனிப்பட்ட முறையிலும், தொழில் ரீதியாகவும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Advertisment

கொரோனா சிகிச்சை : உங்களை உலகம் தலை வணங்குகிறது! மருத்துவர்களுக்கு “ராயல் சல்யூட்”!

நாடு முழுவதும் திரைப்படங்களின் படப்பிடிப்பு மார்ச் 31 வரை நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் திரையுலகினர் பல கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்து வரும் நிலையில், சில பாலிவுட் திருமணங்களை ஒத்திவைக்க காரணமாகவும் கொரோனா அமைந்துள்ளது. ஆம்... பாலிவுட் நடிகர் வருண் தவானின் திருமணத்திற்காக காத்துக் கொண்டிருந்தார்கள் ரசிகர்கள். ஆனால் இந்த கொரோனா நிஜ வாழ்க்கையில் வருணுக்கு வில்லனாகியிருக்கிறது.

வருண் தவான் மற்றும் அவரது நீண்ட நாள் காதலி நடாஷா தலால் 2020 கோடை விடுமுறையில் தாய்லாந்தில் திருமணம் செய்துக் கொள்ள முடிவு செய்திருந்தார்கள். ஆனால் தற்போது உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனாவால், தங்கள் திருமணத்தை நவம்பருக்கு தள்ளி வைத்திருக்கிறார்களாம். தாய்லாந்தில் திருமணம் செய்துக் கொண்டாலும், மும்பையில் மிக பிரமாண்டமான வரவேற்பு நிகழ்வையும் நடத்த வருண் - நடாஷா ஜோடி திட்டமிட்டிருந்ததாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அப்படி அந்த ஃபோன்ல என்ன தான் இருந்துச்சு? : ஃபார்முக்கு திரும்பிய தேவி

அதே போன்று பாலிவுட் நடிகை ரிச்சா சதா தனது காதலர் அலி ஃபசலை  ஏப்ரல் மாதத்தில் திருமணம் செய்துக் கொள்வதாக பிப்ரவரியில் அறிவித்தார். ஆனால், அவர்களின் உறவினர் மற்றும் நண்பர்கள் பலர் வெளிநாட்டில் இருப்பதால் தற்போது அவர்களின் திருமணமும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாம். டெல்லியில் நடக்கும் இந்தத் திருமணத்துக்கு விருந்தினர்கள் வருவதில் ஏற்பட்டுள்ள சிக்கலை மனதில் வைத்து, கொரோனா வைரஸ் முடிவுக்கு வந்ததும் திருமணம் செய்துக் கொள்ள முடிவெடுத்திருக்கிறார்களாம் ரிச்சாவும், ஃபசலும்!

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்"

Varun Dhawan Coronavirus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment