சினிமா பத்திரிகையாளராக தொடங்கி இயக்குனராக உயர்ந்தவர் சித்ரா லட்சுமணன். இவரின் வலையொளி தொலைக்காட்சிக்கு இயக்குனர் வசந்தபாலன் பேட்டி ஒன்று அளித்திருந்தார்.
அந்த காணொலி தற்போது வைரலாகி வருகிறது. அந்தப் பேட்டியில் இந்தியன் படப் பிடிப்பு தளத்தில் நடந்த சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துக் கொண்டார். அப்போது வசந்தபாலன், “என்னை கண்டாலே அவருக்கு பிடிக்காது. எப்போதும் முறைத்துக் கொண்டே இருப்பார். ஏதோ என்னிடம் அவருக்கு பிடிக்கவில்லை.
சங்கர் சார் எப்பவுமே காட்சியை நடித்து காண்பிப்பார். அந்தக் காட்சி என்னனா? வேணு சார் கமல்ஹாசனை வீட்டில் சிறை வைத்து இருப்பார்.
அந்தக் காட்சி முதலில் நான் நடித்தேன். கை, கால்களில் கயிறு கட்டப்பட்ட நிலையில் நான் அங்கிருந்து சட்டென புரண்டு நான் நடித்தேன். அது சுங்கர் சாருக்கு பிடித்துவிட்டது.
அடுத்து கமல்ஹாசன் சார் மேக்அப் உடன் வந்தார். அந்தக் காட்சியை எடுக்கும்போது அவர் விஸ்க் விஸ்க் என்று மெதுவாக வருவார். கேமரா ஓடிக்கொண்டிருந்தது.
சங்கர் சார் கமலிடம் சார் கொஞ்சம் வேகமாக வாருங்கள் என்றார். அதுவும் சரியாக வரவில்லை. அடுத்து என்னை நடித்து காண்பிக்க சொன்னார்.
நானும் நடித்து காண்பித்தேன். அவ்வளவுதான் கமல் சார் ஓட் நான்சென்ஸ் என்றார். எல்லோரும் அங்கிருந்து ஓடிவிட்டோம். எனக்கு மனது கஷ்டமாக இருந்தது.
திரைப் படத் துறையை விட்டு வெளியேறிவிடலாமா என்று நினைத்தேன்” எனத் தெரிவித்துள்ளார்.
நன்றி: சித்ரா லட்சுமணன் வலையொளி
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“