/indian-express-tamil/media/media_files/2025/09/06/screenshot-2025-09-06-105808-2025-09-06-10-58-24.jpg)
கண்ணதாசன் ஒரு சிறந்த தமிழ் பாடலாசிரியர், கவிஞர், மற்றும் பத்திரிகையாளர் ஆவார். அவர் சுமார் 5,000 திரைப்படப் பாடல்களையும், 4,000 கவிதைகளையும் எழுதியுள்ளார். "கவிஞர்களின் ராஜா" என்று அழைக்கப்படும் இவர், பாரதிக்குப் பிறகு சிறந்த நவீன கவிஞராகக் கருதப்படுகிறார்.
எம்.எஸ். விஸ்வநாதன் (எம்.எஸ்.வி.) தமிழ், மலையாளம், தெலுங்கு போன்ற மொழிகளில் 800க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்த, "மெல்லிசை மன்னர்" என்று அழைக்கப்பட்ட ஒரு இந்திய இசையமைப்பாளர், பாடகர் மற்றும் நடிகர் ஆவார். அவர் நான்கு முதல்வர்களுடன் (என்.டி.ஆர், எம்.ஜி.ஆர், கருணாநிதி, மற்றும் ஜெயலலிதா) பணியாற்றியுள்ளார் மற்றும் தமிழ் ஆன்மாவின் ஒரு பகுதியாக கருதப்படுகிறார்.
டி.எம். சௌந்தரராஜன் (டி.எம்.எஸ்.) தமிழ் திரையுலகின் புகழ்பெற்ற பின்னணிப் பாடகர் ஆவார். இவர் 1922 ஆம் ஆண்டு மார்ச் 24 ஆம் தேதி மதுரையில் பிறந்தார். சுமார் 6.5 தசாப்தங்களுக்கும் மேலாக 3,162 திரைப்படங்களில் 10,138 பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார். இவர் பக்திப் பாடல்கள், கர்நாடக சங்கீதப் பாடல்கள், மற்றும் பக்திப் பாடல்கள் எனப் பல்வேறு வகைகளில் பாடல்களைப் பாடி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார். 2003 ஆம் ஆண்டு இவர் பத்மஸ்ரீ விருதைப் பெற்றார்.
நடிகர் சிவாஜி கணேசனின் இயற்பெயர் விழுப்புரம் சின்னையா மன்ராயா் கணேசமூர்த்தி ஆகும். 1952 ஆம் ஆண்டு பராசக்தி திரைப்படம் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமான இவர், பலவிதமான கதாபாத்திரங்களில் தனது தனித்துவமான நடிப்பால் அனைவரையும் கவர்ந்தவர். இவர் அக்டோபர் 1, 1928 அன்று பிறந்தார் மற்றும் ஜூலை 21, 2001 அன்று மறைந்தார்.
இவர்கள் நான்கு பேரும் சேர்ந்த ஒரு பாடல் தான் புதிய பறவை படத்திலிருந்து 'எங்கே நிம்மதி'. இந்த பாடலை எந்த டெக்னோலஜியும் இல்லாத போது கூட 60 வியலின்களை ஒன்றாக வாசிக்க வைத்து கம்போஸ் செய்த பாடல் இது.
இதை பற்றி பேச்சாளர் வாசுகி மனோகரன் பேசுகையில், "இந்த பாடலுக்கு வரி எழுதிவிட்டு கண்னதாசன் என்னை போல் இந்த வரிகளை எழுத யாராலும் முடியகேன்று இந்த உலகம் பேசும் என்று கூறியிருக்கிறார். அதை தொடர்ந்து எம் எஸ் வி என்ன தான் வரிகள் எழுதினாலும்ம் என் இசைக்கு ஈடு ஆகாது என்று கூறினார். அடுத்ததாக டி.எம்.எஸ் அவர்கள், என்ன பெரிய வரிகள் இசை, அதை வைத்து அழகிய ஒரு பாடல் வடிவத்தில் கொடுக்கப்போவது என் குரல் தானே என்று கூறியிருக்கிறார். அனால் சிவாஜி அமைதியாகவே இருந்திருக்கிறார். அபோது அவரிடம் கேட்ட போது 'என்ன தான் நீங்கள் பாடல் எழுதி இசையமைத்து பாடினாலும், மக்கள் திரையில் என்னை தானே பார்க்க வருவார்கள்' என்று கூறியிருக்கிறார்." இதை வசுக்ஹய் அவர்கள் ஒரு மேடை பேச்சில் கூறியிருந்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.