பிக்பாஸ் போட்டியாளரான விக்ரமனை நிகழ்ச்சியில் வெற்றிபெற வைக்க அவருக்கு வாக்களியுங்கள் என்று வி. சி.க தலைவர் திருமாவளவன் ட்வீட் செய்துள்ளார்.
விஜய் டிவில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 6-யின் போட்டியாளர் விக்ரமன். இவர் விஜய் டிவி சீரியலில் முதலில் தனது பயணத்தை தொடங்கினார். தொடர்ந்து செய்திவாளிப்பாளராக முன்னணி நியூஸ் சேனல்களில் வேலை செய்தார். தொடர்ந்து கலாட்டா யூடியூப் சேனலில் அரசியல் தலைவர்களை பேட்டிக் கண்டார்.
திரெளபதி பட இயக்குநர் மோகன் ஜி-யை இவர் பேட்டி கண்டபோது, அரசியல் ரீதியாக விக்ரமன் கேட்ட கேள்விக்கு இயக்குநரால் பதில் சொல்ல முடியவில்லை. இதனால் அவர் பேட்டியைவிட்டு சென்றுவிட்டார். இந்த வீடியோ அப்போதே வைரலானது.
மேலும் இவர் பாண்டே மற்றும் எஸ்.வி சேகர் ஆகியோரிடம் எடுத்த நேர்காணல்கள் 10 லட்சம் பார்வையாளர்களை தாண்டி, பார்க்கப்பட்டது. இந்நிலையில் அவர் விசிக கட்சியின் சேர்ந்தார். தொடர்ந்து அரசியல் ரீதியாக செயல்பட்டு வந்தார்.
இந்நிலையில் இந்த வருடம் நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார்.முதலில் அவர் கவனம் பெறவில்லை என்றாலும். அவரின் அரசியல் கருத்துக்கள் பலரால் பாராட்டப்பட்டது. மற்ற போட்டியாளர்கள் ஒருமையில் திட்டியபோதும்கூட, இவர் மரியாதையாக அழைத்து பேசினார். மேலும் தமிழ்நாட்டின் பெயர் எப்படி வந்தது என்று அவர் டிடி-யிடம் பேசிய வீடியோ தற்போது வைராகி வருகிறது. இந்நிலையில் அவர் பீஃ உணவு பற்றியும் பேசியுள்ளார்.
இந்நிலையில்,பிக்பாஸ் போட்டியில் விக்ரமனை வெற்றிபெற வைக்க அவருக்கு வாக்களியுங்கள் என்று வி.சி.க தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவரது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றை பதிவு செய்துள்ளார்.