Advertisment

'திருமா காதல் செய்திருக்கலாம்; கை கூடாமல் போயிருக்கலாம்': மேடையை அதிர வைத்த பிரபல சினிமா இயக்குனர்

லோக பத்மநாதன் இயக்கியுள்ள 'செம்பியன் மாதேவி' படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் திருமாவளவன் கலந்து கொண்டார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Thiruma Marriage

Thirumavalavan in Movie Function

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், தலித் தலைவராக அறியப்பட்டாலும், தலித் அல்லாத சமூகத்தினரையும், இஸ்லாமியர், கிறிஸ்தவர் போன்ற மதச் சிறுபான்மையினரையும் எப்படியாவது ஒருங்கிணைத்துவிட வேண்டும் என்பதில் பெரும் முனைப்புடையவர்.

Advertisment

அரசியலைத் தாண்டி மின்சாரம், கலகம் போன்ற சில திரைப்படங்களிலும் திருமாவளவன் முகம் காட்டினார். இலக்கிய ஆர்வமும் திருமாவுக்கு உண்டு. அத்துமீறு’, ‘தமிழர்கள் இந்துக்களா?’, ‘இந்துத்துவத்தை வேரறுப்போம்போன்ற புத்தகங்களையும் எழுதியுள்ளார்.

திருமா திருமணம் செய்துகொள்ளவில்லை. கட்சிக்குத் தேர்தல் அங்கீகாரம் கிடைத்த பின் அதைப் பற்றி யோசிப்பேன்என்று தனது 50-வது பிறந்த நாளன்று சொன்னார்.

இந்நிலையில், லோக பத்மநாதன் இயக்கியுள்ள 'செம்பியன் மாதேவி' படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் திருமாவளவன் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் இயக்குனர் சங்கத் தலைவர் உதயகுமார் பேசுகையில், ”திருமாவளவன் பற்றி சொல்ல வேண்டியதே இல்லை. பழகுவதற்கு மிகவும் எளிமையானவர், இனிமையானவர், பாசமானவர், அன்பானவர், ஒழுக்கமானவர்…

அவர் இந்த படவிழாவுக்கு வர்றதுனாலே நானும் வர்றேன் சொல்லி ஒத்துக்கிட்டேன். அவர் சும்மா வந்திருக்க மாட்டாரு. அந்த படத்துல ஏதோ ஒரு விஷயம் இருக்கு. காதலுக்கு ஜாதி, மதம், மொழி, இனம் எதுவும் கிடையாது.

எந்த ஹீரோவுக்கும் காதல் படத்துல நடிக்கிறது ரொம்ப கஷ்டம்.

நீங்க அரசியல்ல கொடுக்கிற எழுச்சி வசனங்கள் வேற, ஆனா காதல் இருக்கு பாருங்க…. நீங்க காதலிச்சு இருந்தா தான் உங்களுக்கு தெரியும். எத்தனை பேரு வருத்தப்படுறாங்க.

சொல்லமுடியாது.. ஒருவேளை திருமா காதலிச்சிருக்கலாம்..

அது கைகூடாமல் போயிருக்கலாம், ஆனா நீங்க திருமணம் செய்யவில்லை என்பதில் உங்க தம்பிகளுக்கு எத்தனை வருத்தம் தெரியுமா? என்னையும் சேர்த்து.

அது ஒரு உணர்வுண்ணே. அது மிஸ் பண்ணிட்டீங்களோ நான் தனிப்பட்ட முறையில வருத்தப்படுறேன். இதை மேடையில பேசக் கூடாது. ஆனாலும் ஒரு தம்பியா, அண்ணன்கிட்ட கேட்கிறேன்” என்று இயக்குனர் உதயக்குமார் பேசினார்.

இந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Vck
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment