/tamil-ie/media/media_files/uploads/2019/09/Vedaant-Madhavan.jpg)
வேதாந்த் மாதவன்
Madhavan Ranganathan: 14 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு ஆசிய சாம்பியன்ஷிப் நீச்சல் போட்டியில், நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் வெள்ளிப் பதக்கம் வென்றிருக்கிறார்.
வேதாந்த், உத்கர்ஷ் பாட்டீல், சாஹில் லாஸ்கர் மற்றும் ஷோன் கங்குலி ஆகியோர் வெள்ளிப் பதக்கத்தையும், தாய்லாந்து தங்கப் பதக்கத்தையும், ஜப்பான் வெண்கலத்தையும் வென்றிருக்கிறது. ஆசிய சாம்பியன்ஷிப்பில் 4x100 மீ ஆண்கள் குழு, ஃப்ரீஸ்டைல் ரிலேவில் இந்தியா தங்கம் வென்றது. இதன் படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த மாதவன் தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார்.
”இந்தியாவின் சார்பாக கலந்துக் கொண்ட வேதாந்தின் முதல் அதிகாரப்பூர்வ வெள்ளிப்பதக்கம்” என்றுக் குறிப்பிட்டு தன் மகனை வாழ்த்தியிருக்கிறார் மாதவன். வேதாந்த ஏற்கனவே மாநில அளவில் நடந்த நீச்சல் போட்டிகளில் பங்கேற்று பல பதக்கங்களைப் பெற்றுள்ளார். தேசிய அளவிலான ஜூனியர் நீச்சல் பிரிவில், கலந்துக் கொண்டு 3 தங்கப் பதக்கங்களையும், 1 வெள்ளிப்பதக்கத்தையும் பெற்றார். இது குறித்து அவ்வப்போது தனது சமூக வலைதளங்களில் மாதவன் பகிர்ந்து வந்தது குறிப்பிடத் தக்கது
இதற்கிடையே ”ராக்கெட்ரி: த நம்பி எஃபெக்ட்” எனும் படத்தின் வெளியீட்டிற்காக காத்துக் கொண்டிருக்கிறார் மாதவன். இப்படம் முன்னாள் இந்திய விண்வெளி ஆராய்ச்சி (இஸ்ரோ) விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)

Follow Us