/tamil-ie/media/media_files/uploads/2020/03/Rahul-Dev-relationship-with-mugdha-godse.jpg)
Rahul Dev relationship with mugdha godse
Vedhalam Villain : இயக்குநர் சிவாவின் ‘வேதாளம்’ படத்தில் நடிகர் அஜித் நடித்திருந்தார். ஸ்ருதி ஹாசன், லட்சுமி மேனன் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள். இந்தப் படத்தில் வில்லனாக நடித்திருந்தவர் பாலிவுட் நடிகர் ராகுல் தேவ். அவர் நடிகை முக்தா கோட்சேவுடன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக தெரிவித்துள்ளார். ஜெயம் ரவி, நயன்தாரா நடித்திருந்த, ’தனிஒருவன்’ படத்தில் அரவிந்த் சாமியின் காதலியாக ஷில்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் முக்தா.
சென்னை விமான நிலையத்தில் காணாமல் போனது காமராஜர் பெயர்
பல ஆண்டுகளுக்கு முன்பு ராகுலின் மனைவி புற்றுநோய்க்கு இரையாகிவிட்டார். இருப்பினும் தான் தொலைத்த அன்பை முக்தாவிடம் மீண்டும் கண்டிருக்கிறார் ராகுல். இவர்கள் 2015-ம் ஆண்டு முதல் உறவில் இருப்பதாகக் கூறப்படுகிறது. தற்போது 51 வயதாகும் ராகுல், சமீபத்தில், ஒரு நேர்காணலில், கலந்துக் கொண்டார். அதில் முக்தாவுக்கும் தனக்குமான உறவைப் பற்றியும் குறிப்பிட்டார். "எங்களுக்கு கிட்டத்தட்ட 14 வயது இடைவெளி உள்ளது, அது எனக்கு கவலை அளித்தது" என்றுக் கூறிய, ராகுல் தனது பெற்றோருக்கு 10 வயது இடைவெளி இருந்தது எனவும் தெரிவித்தார்.
”நீங்கள் மகிழ்ச்சியாக உணர்ந்தால், வயது வித்தியாசம் ஒரு பிரச்சினையே இல்லை" என்றும் ராகுல் தெரிவித்தார். இது உடனடியாக வைரல் அறிக்கையாக மாறியுள்ளது. படங்களில் வில்லனாக இருந்தாலும், நிஜ வாழ்க்கையில் அன்புக்கு அடிமையானவராக ராகுல் இருப்பது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
மின்வாரியத்தில் கணக்கீட்டாளர் தேர்வு: ‘தமிழிலும்’ நடத்தப்படும் என அறிவிப்பு
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.