/tamil-ie/media/media_files/uploads/2020/03/New-Project-2020-03-04T201004.589.jpg)
actress veena nandakumar, veena nandakumar open talk, வீணா நந்தகுமார், நான் பீர் குடிப்பேன் வீணா நந்தகுமார் பேட்டி, veena nandakumar says i drink beer, நடிகை வீணா நந்தகுமார், veena nandakumar likes drink beer, veena nandakumar interview, cinema news, tamil cinema news, news on cinema
நடிகை வீணா நந்தகுமார் தனக்கு பீர் ரொம்ப பிடிக்கும் என்றும் நான் பீர் குடிப்பேன் என்று சொல்வதற்கு ஏன் பயப்பட வேண்டும் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
சிங்காரச் சென்னை வரலாறு 1 : இது தங்கசாலை தெரு உருவான கதை...
‘கெட்டியோலனு என்டே மலகா’ என்ற மலையாளப் படத்தில் நடித்து புகழ்பெற்ற நடிகை வீணா நந்தகுமார் நடிப்பதோடு மட்டுமல்லாமல் சமூக வாழ்க்கை குறித்து அவ்வப்போது வித்தியாசமான கருத்துகளைக் கூறி கவனத்தை ஈர்ப்பவர். வீணா தொட்ரா என்ற தமிழ் படத்தில் நடித்துள்ளார். அண்மையில், வீணா நந்தகுமார் ஒரு பேட்டியில் “எனக்கு பீர் ரொம்ப பிடிக்கு. நான் பீர் குடிப்பேன். நான் பீர் குடிப்பேன் என்பதை வெளியில் சொல்வதற்கு நான் ஏன் பயப்பட வேண்டும்” என்று கேட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
பொதுவாக ஆண் மையச் சமூகத்தில், மது அருந்துவது, புகைபிடிப்பது எல்லாமே ஆண்களின் பழக்கமாகத்தான் பாவிக்கப்படுகிறது. பெண்கள் யாரேனும் புகைபிடித்தாலோ, அல்லது மது அருந்தினாலோ அதை பெரும்பாவமாகவோ அல்லது ஏதோ அடாது ஒன்றை செய்துவிட்டதாகவோத்தான் இந்த சமூகம் பார்க்கிறது.
மது அருந்துவது, புகைபிடிப்பது ஆரோக்கியம் சார்ந்து அல்லது ஒழுக்கம் சார்ந்த பிரச்னைகளாக விவாதிக்கப்படுவது எல்லாம் ஒருபுறம் இருக்க, மது அருந்துவது, புகைபிடிப்பது என்பதை பெண்கள் பலரும் செய்துவருகின்றனர். ஆனால், ஒரு ஆணைப் போல, அவர்கள் வெளிப்படையாக சொல்லிக்கொள்ள முடியாத சூழலே நிலவுகிறது.
இந்த நிலையில், மலையாள நடிகை வீணா நந்தகுமார் ஒரு மலையாள பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், “எனது குடிப்பழக்கத்தை வெளிப்படுத்த நான் ஏன் பயப்பட வேண்டும்? இது ஒரு கொடூரமான குற்றமா? நான் பீர் குடித்திருக்கும்போது நிறைய பேசுவேன். நான் முன்பு ஒரு நேர்காணலில் இந்த விஷயத்தை வெளிப்படுத்தினேன். நான் பீர் குடிக்கிறேன். பீர் குடிப்பது எனக்கு ரொம்ப பிடிகும். பெரும்பாலான இளைஞர்களுக்கும் பீர் குடிக்கும் பழக்கம் உண்டு. இந்த பழக்கத்தால் யாருக்கும் பாதிப்பு ஏற்படாது, அது தனிப்பட்ட விருப்பம்.” என்று கூறியுள்ளார்.
வீணா நந்தகுமாரின் இந்த பேட்டி வெளியானதைத் தொடர்ந்து சமூக ஊடகங்களில் பலரும் அவரை தாக்கி விமர்சனம் செய்தனர். இதையடுத்து, “எனது பேட்டியை தவறாகப் புரிந்துகொண்டு மக்கள் என்னை கேலி செய்கிறார்கள். அவர்கள் செய்த செயல் சரியா தவறா என்பதை அவர்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், வீணா நந்தகுமார் அந்த பேட்டியில், “நடிப்பதற்கு எந்த கட்டுப்பாடுகளும் இல்லை. எனக்கு நடிப்பதற்கு கவர்ச்சியான கதாபாத்திரம் கிடைத்தால் நடிக்கத் தயார். இந்த குறிப்பிட்ட கதாபாத்திரத்தில்தான் நடிப்பேன் என்று பிடிவாதமாக இருக்க மாட்டேன். நான் நல்ல ஸ்கிரிப்டை மட்டுமே விரும்புகிறேன். ஒரு கலைஞருக்கு திறந்த மனம் இருக்க வேண்டும் என நான் நம்புகிறேன். ஒரு நல்ல ஸ்கிரிப்ட்டில் ஒரு நல்ல கதாபாத்திரத்திற்காக எதையும் செய்ய நான் தயாராக இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.