தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள விக்ரம் நடிப்பில், அடுத்து வெளியாக உள்ள வீர தீர சூரன் பாகம் 2 படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில், நடிப்புக்காக எந்த எல்லைக்கும் செல்லும் நடிகர்களில் முக்கியமானவர் விக்ரம். கொரோனா தொற்றுக்கு பிறகு, மகான் படத்தில் நடித்தார். இந்த படம் நேரடியாக ஒடிடி தளத்தில் வெளியானது. அதன்பிறகு, பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான கோப்ரா திரைப்படம் கலவையாக விமர்சனங்களை பெற்று தோல்வியை சந்தித்தது. அதன்பிறகு மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் 2 பாகங்களில் நடித்திருந்தார்.
பொன்னியில் செல்வன் படம் வெற்றியை கொடுத்தாலும் அதன்பிறகு, வெளியான தங்கலான்’ திரைப்படம் தோல்விப்படமாக அமைந்தது. இதனால் விக்ரம் நடிக்கும் அடுத்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்த நிலையில், தற்போது இயக்குனர் எஸ்.யூ அருண்குமார் இயக்கத்தில் வீர தீர சூரன் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். ஒரு எளிய மளிகைக் கடை உரிமையாளராக, நடித்துள்ள விக்ரம், ஒரு கேங்ஸ்டராக இருப்பது போன்று திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
Advertisment
Advertisements
வீர தீர சூரன்: பாகம் 2-ல் விக்ரமுடன், எஸ்.ஜே. சூர்யா, முக்கிய கேரக்டரில் நடிக்க, மலையாள நடிகர் சூரஜ் வெஞ்சாரமூடு இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். துஷாரா விஜயன் மற்றும் சித்திக் ஆகியோரும் நடிக்கின்றனர். படத்தில் விக்ரமின் கேரக்டரருக்கு காளி என்று பெயரிடப்பட்டுள்ளது, படத்தின் டிரெய்லரில் ஒரே இரவில் நடக்கும் ஒரு சுவாரஸ்யமான கதைகளம் தான் இந்த படம் என்பது தெரியவருகிறது.
சூரியன் உதிப்பதற்குள் ஒரு சிலரை ஏமாற்ற விரும்பும் ஒரு முட்டாள்தனமான போலீஸ்காரர் எஸ்.ஜே.சூர்யா இருக்கிறார். மேலும் சில கணக்குகளைத் தீர்க்க விரும்பும் கண்ணன் (சுராஜ்) இருக்கிறார். இவை அனைத்திற்கும் இடையில், ஒரு தீவிரமான கடந்த காலத்தைக் கொண்ட ஒரு மனிதர் (விக்ரம்)பெரிய புதிரைத் தீர்க்க களமிறங்குகிறார். டிரெய்லர் கதைக்களத்தைப் பற்றிய அதிக தகவல்களை விட்டுவிடாமல் மேடையை அமைப்பதில் சிறப்பாக செயல்படுகிறது. டிரெய்லரிலிருந்து நமக்குத் தெரிந்ததெல்லாம், கிராமத்து பின்னணி கொண்ட அதிரடி ஆக்ஷன் கதைக்களமாக இருக்கும் என்பது தெரிகிறது.
ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு, தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜி.கே.பிரசன்னா எடிட்டிங் பணிகளை செய்துள்ளார். இதற்கு முன்பு சிலமுறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட வீர தீர சூரன் திரைப்படம் ஒரு வழியாக, மார்ச் 27 அன்று வெளியாக உள்ளது, இந்தப் படம் மற்றொரு பெரிய மலையாளப் படமான மோகன்லால் இயக்கத்தில் பிருத்விராஜ் சுகுமாரன் இயக்கத்தில் L2: எம்புரான் படத்துடன் வெளியாகிறது.