/tamil-ie/media/media_files/uploads/2020/07/Vemal-soori-in-Kodaikanal-forest.jpg)
கொடைக்கானல் ட்ரிப்பில் நண்பர்களுடன் விமல் - சூரி
இந்த பொது முடக்க காலத்தில் தனது வீட்டிலிருந்து சுவாரஸ்யமான மற்றும் வேடிக்கையான வீடியோக்களை வெளியிட்டு தனது ரசிகர்களையும் பார்வையாளர்களையும் மகிழ்வித்த பிரபல நகைச்சுவை நடிகர் சூரி, 'களவாணி2' படத்தில் நடித்த நடிகர் விமலுடன் இணைந்து சிக்கலில் சிக்கியதாகத் தெரிகிறது. இருவரும் சேர்ந்து கொடைக்கானலுக்கு பயணித்தது, வனத்துறையில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
கணவர்… குடும்பம்.. சீரியல்.. அரண்மனை கிளி ஜானு பற்றி தெரியாதவை!
நடிகர் விமல் மற்றும் சூரி ஆகியோர் தங்கள் நண்பர்களுடன் ஜூலை 17-ஆம் தேதி சொந்த ஊரான மதுரையிலிருந்து கொடைக்கானலுக்குச் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சுவாரஸ்யமாக, அவர்கள் மலை வாசஸ்தலத்தில் உள்ள பெரிஜாம் ஏரியில் விதிகளை மீறி மீன் பிடித்ததாக சொல்லப்படுகிறது. ஏரிக்கு வெளியே கையில் ஒரு மீனுடன் விமல் நிற்கும் படம் இணையத்தில் வைரலாகி இதனை உறுதிப்படுத்துகிறது.
கொடைக்கானலில் பல்வேறு இடங்களில் தங்கள் நண்பர்களுடன் இருக்கும் படங்கள் வைரல் ஆனதால் தற்போது இருவரும் சிக்கலில் சிக்கினர். இதையடுத்து சூரி மற்றும் விமலுக்கு, வனத்துறையினர் தலா இரண்டாயிரம் ரூபாய் அபராதம் விதித்ததோடு, எச்சரிக்கை விடுத்ததாகவும் கூறப்படுகிறது.
கொடுமை, இப்படியெல்லாம் நடக்குமா?
இந்நிலையில் விமல் மற்றும் சூரிக்கு உதவி புரிந்த 2 வனக்காவலர்கள் தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக, மாவட்ட வனத்துறை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.