ஹே வாராண்டா... ரஜினிக்கு எழுதிய மாதிரி பாட்டா? சென்னை 28 ஜெய் பாட்டு உருவானது இப்படித்தான்!

இளைஞர்களின் நட்பு, கிரிக்கெட், காதல் என சென்னையின் புறநகர்ப் பகுதி வாழ்வை யதார்த்தமாகப் பதிவு செய்த சென்னை 600028 படத்தில் ஹிட் ஆன ஒரு பாடல் குறித்து அப்படத்தின் இயக்குநர் வெங்கட்பிரபு கூறியிருக்கிறார்.

இளைஞர்களின் நட்பு, கிரிக்கெட், காதல் என சென்னையின் புறநகர்ப் பகுதி வாழ்வை யதார்த்தமாகப் பதிவு செய்த சென்னை 600028 படத்தில் ஹிட் ஆன ஒரு பாடல் குறித்து அப்படத்தின் இயக்குநர் வெங்கட்பிரபு கூறியிருக்கிறார்.

author-image
WebDesk
New Update
chennai 28

'சென்னை 28' திரைப்படத்தில் ஜெய் அறிமுகமாகும் காட்சிக்கான பாடல் உருவான விதம் குறித்து, அப்படத்தின் இயக்குநரும், இசையமைப்பாளருமான வெங்கட் பிரபு ஒரு சுவாரசியமான தகவலை பகிர்ந்துள்ளார்.  

Advertisment

சென்னை 600028 திரைப்படம் வெங்கட் பிரபு இயக்கத்தில் 2007 ஆம் ஆண்டு வெளியானது இது வெங்கட் பிரபு இயக்கிய முதல் திரைப்படம். இந்தப் படம் ஒரு ஸ்லீப்பர் ஹிட் ஆகி, பின்னர் ஒரு கல்ட் கிளாசிக் அந்தஸ்தைப் பெற்றது. சென்னை புறநகர்ப் பகுதியான மந்தவெளி, ராயப்பேட்டை, மயிலாப்பூர் ஆகியவற்றைச் சேர்ந்த இளைஞர்களின் நட்பு, கிரிக்கெட், காதல் மற்றும் வாழ்க்கையை பற்றி இந்த கதை இருக்கும். 

இந்த படத்தில் சிவா, ஜெய், பிரேம்ஜி அமரன், விஜயலட்சுமி அகாதியன், இளவரசு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படம், வெங்கட் பிரபுவை ஒரு குறிப்பிடத்தக்க இயக்குனராகவும், பல நடிகர்களை பிரபலப்படுத்தவும் உதவியது.

இந்நிலையில் திரைப்படத்தில் ஜெய் அறிமுகமாகும் காட்சிக்கான பாடல் உருவான விதம் குறித்து, அப்படத்தின் இயக்குநரும், இசையமைப்பாளருமான வெங்கட் பிரபு ஃபிலிமாசேத்துக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

Advertisment
Advertisements

"சென்னை 281 படத்தில், ஜெய் முதன்முதலாக ஒரு ஏரியாவிலிருந்து இன்னொரு ஏரியாவுக்கு வருவார். அவன் வந்தவுடனேயே ஒரு ஹீரோ பில்டப் கொடுப்போம். மற்ற பசங்கல்லாம் இவனைப் பார்த்ததும், 'இவன் வேற டீம், இறங்கிட்டான்' என்று பார்ப்பார்கள். அப்போது ஜெய்யின் அம்மா அவனைக் கூட்டிக்கொண்டு வருவார்கள்.

மற்றவர்களைப் பார்க்கும்போது, ஒரு கவ்பாய் படத்தில் வரும் ஹீரோவைப் போல, இவன் ஒரு பயங்கரமான மாஸ் ஹீரோ என்று காட்டுவதற்காக, அவனது கற்பனையில் ஒரு விஷயம் வரும். அவன் பயங்கர ஸ்லோ மோஷனில் நடப்பான், தண்ணீர் எல்லாம் தெறிக்கும். எல்லோரும் இவனை எப்படிப் பார்ப்பார்கள் என்று அவன் கற்பனை செய்வான்.

அப்போது ஒரு பயங்கர மாஸ் ஹீரோவுக்கான பாடல் ஒன்றை போடலாம் என்று முடிவு செய்தோம். பிரேம்ஜி அமரன் தான் இந்தப் பாடலை ரீ-ரிகார்டிங் செய்தார். 'ஏய் வரான்டா... இவன் வீர சுரன்தான்டா... ஏய் கேலேண்டடா... இவன் எம்ஜிஆரு பேரன்டா... ' - இந்த வரிகள் கொண்ட பாடலை பிரேம்ஜி கம்போஸ் செய்தார்."

இந்தக் காட்சியும், அதற்கான பாடலும் 'சென்னை 28' படத்தின் மிக முக்கிய அம்சங்களில் ஒன்றாக அமைந்தது. ஜெய் கதாபாத்திரத்தின் அறிமுகத்தை இந்தப் பாடல் மிகவும் சுவாரஸ்யமாகவும், மாஸ் ஆகவும் சித்தரித்தது. மேலும் இந்த பாடல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதாகவும் வெங்கட் பிரபு தெரிவித்தார். 

❤️‍🔥🔥 #venkatprabhu #chennai28 #dhanushforever #selvaraghavan #lovefailuresong #thalapathyforever #tamilcinemaupdates #thiyagarajankumararaja

Posted by film.speaks1 on Tuesday, June 3, 2025
Venkat Prabhu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: