வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை 2 படம் பெரிய வெற்றிப்படமாக மாறியுள்ள நிலையில், பா.ரஞ்சித் இயக்குனராக அறிமுகமான அட்டக்கத்தி திரைபபடத்தை வெளியிட, இயக்குனர் வெற்றிமாறன் எவ்வாறு உதவி செய்தார் என்பது குறித்து, இயக்குனர் வெங்கட்பிரபு, கூறியுள்ளார்.
Read In English: Venkat Prabhu on Vetrimaaran’s part in releasing Pa Ranjith’s directorial debut: ‘He laughed so hard…’
கடந்த 2012-ம் ஆண்டு வெளியான படம் அட்டக்கத்தி. இந்த படத்தின் மூலம் பா.ரஞ்சித் இயக்குனராக அறிமுகமான நிலையில், நடிகர் தினேஷ் முதல்முறையாக இந்த படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். அதன்பிறகு அட்டக்கத்தி தினேஷ் என்று அழைக்கப்பட்ட இவர். அடுத்து, ராஜூ முருகன் இயக்கத்தில் குக்கூ, வெற்றிமாறன் இயக்கத்தில் விசாரணை உள்ளிட்ட் பல படங்களில் நடித்திருந்தாலும் அவரது பெயர் அட்டக்கத்தி தினேஷ் என்றே அழைக்கப்பட்டார்.
கடந்த சில ஆண்டுகளாக, கடும் சரிவை சந்தித்த தினேஷ் சமீபத்தில் லப்பர் பந்து என்ற படத்தில் கெத்து தினேஷ் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படம் வெளியானதில் இருந்து அட்டக்கத்தி தினேஷ் கெத்து தினேஷ் என்று அழைக்கப்படுகிறார். சமீபத்தில் கலாட்டா பிளஸ் யூடியூப் சேனலில் பேசிய தினேஷ், மீண்டும் வெற்றிப்படம் கொடுத்தது பற்றியும், வெற்றிமாறனுக்கும் அட்டகத்தி படத்திற்கும் இடையேயான அற்புதமான தொடர்பைப் பற்றியும் திறந்து வைத்தார்.
அட்டகத்தி வெற்றிக்குப் பிறகு தான் கடந்து வந்த பாதை குறித்து பேசிய தினேஷ், “குக்கூ படத்தில், நடித்ததால், என் உடல்நிலையின் எல்லையைத் தாண்டி பாதிக்கப்பட்டது. அட்டகத்திக்குப் பிறகு ஒரு ‘மாஸ்’ படத்தை எடுத்திருக்க வேண்டுமா என்று அடிக்கடி நினைப்பேன். குக்கூ படத்தில் நடித்தபோது, ஆரம்பத்தில் எனது ஆற்றலை இழந்ததற்காக நான் மிகவும் மோசமாக உணர்ந்தேன். இருந்தபோதிலும், திரைக்கதையில் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்று கூறியதால், பல மாற்றங்களைச் சந்தித்த லப்பர் பந்து இன்று புதிய அடையாளத்தை கொடுத்துள்ளது என்று கூறியுள்ளார்.
இந்நிகழ்ச்சியில், இயக்குனர் வெங்கட் பிரபுவின் பாராட்டுக்கு பதில் அளித்த அவர், அவரது வார்த்தைகளுக்கு நன்றி தெரிவித்ததோடு, அட்டகத்தி படத்தின் ரிலீஸ் செய்ய பெரிய உதவியாக இருந்தவர்கள் வெங்கட் பிரபு மற்றும வெற்றிமாறன் ஆகிய இருவரும் தான் என்று கூறியுள்ளார். அட்டகத்தி எப்படி வெற்றி கண்டது என்பது பற்றி வெங்கட் பிரபு, “ரஞ்சித் மற்றும் சி.வி.குமார் (தயாரிப்பாளர்) என்னிடம் இந்த அவல நிலையைப் பற்றி பேசினர். இந்த படத்தை வெளியிட, ஞானவேல் ராஜா உதவ முடியும் என்று உணர்ந்தேன்.
அதன்பிறகு நானும் வெற்றிமாறனுடன் சேர்ந்து படத்தைப் பார்த்தோம், வெற்றிமாறன் படத்தை பார்த்து மிகவும் சிரித்தார், நாங்கள் அனைவரும் படத்தை ரசித்தோம், அந்த சுவாரஸ்யமே ஞானவேல் ஒப்புக்கொள்ள வைத்தது. உண்மையில், வெற்றிமாறனின் ரிங்க் சிரிப்புதான் ஞானவேல் படத்தை வாங்கி வெளியிட முக்கிய காரணமாக அமைந்தது என்று வெங்கட் பிரபு வெளிப்படையாகக் கூறினார். இந்த சுவாரஸ்யமான கதைக்கு மேலும் கூறிய தினேஷ், “ரஞ்சித் சொன்னது ‘வெற்றி சிரிச்சிட்டே படாத வித்துட்டாரு என்று கூறியதாக தெரிவித்துள்ளார்.
பா.ரஞ்சித் (தங்கலான்), வெற்றிமாறன் (விடுதலை 2), தினேஷ் (லப்பர் பந்து), வெங்கட் பிரபு (கோட்), சி.வி.குமார் (சூது கவ்வும் 2) மற்றும் ஞானவேல் ராஜா (தங்கலான் மற்றும் கங்குவா) ஆகியோரின் முக்கியமான படங்கள் 2024 இல் வெளிவந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.